மும்பை மகாராஷ்டிர மாநிலத்தில் 14000 ஆண்களுக்கு மகளிர் உதவித்தொகை வழங்கி உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஏழை பெண்களுக்கு மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கும் ‘லாட்கி பகின்’ (அன்பு சகோதரி) திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பா.ஜனதா தலைமையிலான ஆளும் மகாயுதி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முக்கிய காரணமாக அமைந்ததாக அந்த கூட்டணி தலைவர்களே கூறினர். மேலும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதால் பயனாளிகள் […]
