230, 110 கே.வி. மின் கம்​பிகளை தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும்: மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்​தல்

சென்னை: 230, 110 கே.வி. மின் கம்​பிகளை தொடர்ந்து கண்​காணிக்க மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. தமிழக மின்வாரி​யம் சென்னை போன்ற பெரிய நகரங்​களில் புதைவட மின் கம்​பிகள் வாயி​லாக ஒவ்​வொரு பகு​திக்​கும் மின்​சா​ரம் விநியோகம் செய்து வரு​கிறது.

அனைத்து மின் பகிர்​மான வட்​டங்​களி​லும் ஒவ்​வொரு பகு​திக்​கும் ஏற்​றார்​போல அரு​காமை​யில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்​சா​ரம் விநி​யோகம் செய்​யப்​படு​கிறது.

இந்​நிலை​யில் அண்மை கால​மாக 230 மற்​றும் 110 கே.வி. மின் கம்​பிகளில் அடிக்​கடி பழுது ஏற்​படு​வ​தால் 230, 110 கே.வி. மின் கம்பிகளை மின் பகிர்​மான கழக பணி​யாளர்​கள் தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும் என மின் தொடரமைப்பு கழகம் அறி​வுறுத்தி​யுள்​ளது.

இது குறித்து மின் தொடரமைப்பு கழகம் வெளி​யிட்ட சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: 230கே.வி. மின் கம்​பிகள் மின்​சா​ரம் விநியோகம் செய்​யும் போது தொடர்ந்து கண்​காணிக்க வேண்​டும். 110 கே.வி. கம்​பிகளை மின் பகிர்​மான கழக பரமரிப்பு பணியாளர் தொடர்ந்து கண்​காணித்து பராமரிப்பு பணி​களை மேற்​கொள்ள வேண்​டும்.

சாலை​யில் பள்​ளம் தோண்டி பழுது சரி செய்​யும் நிலைக்கு செல்​லாமல் கண்​காணிக்க வேண்​டும். மாநக​ராட்சி மற்​றும் காவல்​துறை​யிடம் அனு​மதி பெற்றே சாலை​யில் பள்​ளம் தோண்ட வேண்​டும். இந்த பழுது நீக்​கம் பணி​கள் முழு​வது​மாக முடி​யும் வரை மின் பகிர்​மான கழக அலு​வலர் அந்த பகு​தி​யில் இருக்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.