கவின் படுகொலை: கூலிப்படையின் தலையீடு உள்ளது.. தொல். திருமாவளவன்!

Thol Thirumavalavan: இன்று (ஜூலை 31) தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுக மங்கலத்தில் பொறியாளர் கவின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், இழப்பீடுகளால் இந்த துயரத்தை துடைத்து எரிய முடியாது. பொறியாளர் கவின் ஆணவ படுகொலை கண்டிக்கத்தக்கது. நன்குபடித்தவர் மென்பொருள் பொறியாளர் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டவர். வீண் வம்பு வழக்குகளில் ஈடுபடாதவர், நனி நாகரிகத்திற்கு சொந்தக்காரர் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அனைவரோடும் மிகுந்த கனிவோடு பழகக்கூடிய பண்பு உடையவர். 

பெற்றோரிடம் பேசியதிலிருந்து இவற்றையெல்லாம் உணர முடிந்தது. அப்படிப்பட்டவரை நயந்து பேசி நம்ப வைத்து குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வரவழைத்து இந்த கொடூரமான படுகொலையை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே இரண்டு பேருக்கும் இடையிலான உறவு அது காதலோ, நட்பா என்பது இரு தரப்பு குடும்பத்தினருக்கும் தெரிந்திருக்கிறது. இருதரப்பாலும் இது தேவையற்றது என்று ஒருவருக்கொருவர் கருத்து பரிமாற்றம் செய்திருக்கிறார்கள். அதையும் கடந்து இரண்டு பேருடைய உறவும் தொடர்ந்து இருக்கிறது. 

தன்னுடைய அம்மாவழி தாத்தாவுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெறுவதற்காக நெல்லைக்கு வந்திருக்கிறார். அப்போது சுபாஷினியிடம் இது பற்றி அவரிடம் பேசி இருக்கிறார். அவர் தான் செய்யும் வேலை செய்யும் மருத்துவமனைக்கு அழைத்து வரும்படி கூறியிருக்கிறார். அம்மாவோடு தாத்தாவை அழைத்துக் கொண்டு அவர் மருத்துவமனைக்கு உள்ளே சென்று அம்மாவையும் தாத்தாவையும் உள்ளே அனுப்பிவிட்டு தம்பியையும் உள்ளே அனுப்பிவிட்டு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது என்று வெளியே வந்திருக்கிறார். 

அவர்களின் உள்ளே இருந்து வெளியே வருவதற்கு 15 அல்லது 20 நிமிடங்கள் தான் ஆகியிருக்கின்றன. அதற்குள்ளாக இவரை அழைத்துச் சென்று ஒரு இடத்திலே வைத்து மிளகாய் பொடியை தூவி கொடூரமாக வெட்டி படுகொலை செய்திருக்கிறார். மருத்துவமனைக்கு வந்த 20 நிமிடங்களில் இவையெல்லாம் நடந்து முடிந்திருக்கின்றன என்று இந்த விசாரணையில் தெரிய வருகிறது. வெளியே வந்து மகனை காணவில்லை என்று தேடுகிறபோது அவருடைய தொலைபேசிக்கு அவர் அழைப்பு விடுத்த நிலையில், யாரோ ஒருவர் தொலைபேசி எடுத்து ஒரு ஆக்சிடென்ட் என்று சொல்லி இருக்கிறார்கள். 

கவின் உடைய தாயாரை காவல் நிலையத்திற்கு கொண்டு போய் மூன்று மணி நேரம் அங்கேயே அமர வைத்து அவருக்கு எந்த உறுதிப்படுத்தப்பட்ட தகவலையும் சொல்லாமல் இழுத்து அடித்திருக்கிறார்கள். காவல் துறையினருக்கு முன்கூட்டியே இந்த படுகொலை சம்பவம் தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கிறது. தனக்குத் தெரிந்த காவல் அதிகாரி எல்லைக்குள்ளே இதை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த எல்லைக்குள்ளே வந்து இந்த அவர்கள் இந்த படுகொலையை செய்திருக்கிறார் என்று யூகிக்க முடிகிறது.

தனி ஒரு நபராக இந்த கொலையை அவன் செய்திருக்க வாய்ப்பில்லை என்று சந்தேகப்பட வேண்டிய ஒரு சூழல் உருவாகிறது. அவன் மட்டுமே கொலை செய்தான் என்று வழக்கை முடிப்பதற்கு அந்த காவல் நிலையத்தை சார்ந்த அதிகாரிகள் அல்லது காவல் ஆய்வாளர் போன்றவர்கள் முயற்சித்து இருக்கிறார்கள். அதற்கு கவின் உடைய தாயார் உடன்படவில்லை, பிறகு நாம் நமது தரப்பில் கவின் தரப்பில் கொடுத்த புகாரை ஏற்றுக்கொண்டு தான் வழக்கு பதிவு செய்திருக்கிறார். 

கூலிப்படையின் தலையீடு உள்ளது 

தென்மாவட்டங்களில் நடந்திருக்கிற அத்தனை கொலைகளுக்கு பின்னாலும் கூலிப்படையினரின் கைவரிசை இருந்திருக்கிறது. எனவே இவருடைய பேஸ்புக்கை பார்க்கிறபோது முகநூலை பார்க்கும்போது இன்ஸ்டாகிராமை பார்க்கிறபோது அவர் தொடர்ந்து ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மே, ஜூன், ஜூலை என்று ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு படத்தை போஸ்ட் செய்திருக்கிறார். ஒவ்வொன்றிலும் வெவ்வேறு வகையான பதிவுகளை போட்டுள்ளார்.  நாயைப் பிடித்துக் கொண்டு விரைவில் ஒரு சம்பவம் நடக்கப் போகிறது என்பதை போன்ற சிம்பாலிக் மெசேஜ் வெளிப்படுத்தி இருக்கிறார். ஆகவே இவர் திருமணத்தால் ஆத்திரப்பட்டு இதை செய்யவில்லை. கவினோடு முரண்பட்டும் பகைத்துக் கொண்டும் உறவாடவில்லை. நம்பக்கூடிய அளவுக்கு நெருக்கமாக உறவாடி இருக்கிறார். 

அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் அவர் அழைத்ததுமே பின்னால் அவரோடு போய் இருக்கிறார். நீண்ட கால செயல் திட்டமாக தெரிகிறது. திட்டமிட்டு தான் இந்த படுகொலை நடந்திருப்பதாக தெரிகிறது. எனவே இதன் பின்னணியில் கூலிப்படைனரின் கைவரிசை இருக்குமோ என்று கவின் தரப்பில் சந்தேகப்படுகிறார்கள். எனவே காவல்துறையினர் குறிப்பாக சிபிசிஐடி புலனாய் விசாரணைக்கு தமிழ்நாடு அரசு முறைப்படி அவர்கள் சட்டபூர்வமான விசாரணையை மேற்கொள்ள வேண்டும். அதில் அவருடைய பெற்றோர் இருவரையும் விசாரணைக்கு தீவிர விசாரணைக்கு உட்படுத்தினால்தான் பின்னால் இருக்கிற கூலிப்படையினர் யார் என்பதையும் கண்டறிய முடியும். அந்த கோணத்தில் விசாரணை செல்ல வேண்டும் என்பதுதான் கவின் அவர்களின் தந்தை சந்திரசேகர் அவர்கள் முன்வைக்கக்கூடிய கோரிக்கை 

உடலை நீண்ட நாட்கள் இங்கே பினவறையில் போட்டு இருக்க வேண்டாம். நல்லபடியாக எடுத்து அடக்கம் செய்வோம். நாங்களும் இருந்து அடக்கத்தை செய்ய தயாராக இருக்கிறோம் என்று கேட்டபோது, நீதி மறுக்கப்படும் என்கிற அச்சம் இருக்கிறது. இவர்கள் தப்பி விடுவார்கள் என்கிற அச்சம் இருக்கிறது. எனவே எங்களோடு உறவினர்களோடு உள்ளூரைச் சார்ந்த தோழர்கள் உறவினர்கள் அனைவரோடும் நான் கலந்து பேசி தான் முடிவு எடுக்க முடியும் என்ற கருத்தை சொல்லி இருக்கிறார். 

முக்கியமான கோரிக்கை படுகொலை கூலிப்படையின் துணையோடு தான்  நடந்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பதால் பெற்றோரையும் தாய், தந்தை இருவரையும் விசாரணைக்கு உட்படுத்தி கூலிப்படையினர் யார் என்பதை கண்டறிய வேண்டும். அவர்களையும் சேர்த்து கைது செய்ய வேண்டும் தண்டிக்க வேண்டும் என்பதாகத்தான் இருக்கிறது. இவ்வளவு நேரம் நாங்கள் விசாரித்தது உறவினர்களிடத்தில் குறிப்பாக தந்தை இடத்தில் விசாரித்ததில் இந்த தகவல்களை நாம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலே தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் விடுகிறோம்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் படி இந்த பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு என்ன இழப்பீடுகளை தர வேண்டுமோ அந்த இழப்பீடுகளை தர வேண்டும். அரசு வேலை வாய்ப்பு தர வேண்டும். அவர்களுக்கு நிலம் வழங்க வேண்டும். இவையெல்லாம் சட்டப்பூர்வமாக இருக்கிற உரிமைகள் இழப்பீடுகள். எனவே அதில் எந்த தேக்கமும் ஏற்பட்டுவிடாத வகையில் முதல்வர் நேரடியாக தலையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நீதி வழங்க வேண்டும். அவர்களுக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். கூலிப்படையினரால் இவர்களுக்கும் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமோ என்கிற அச்சம் நிலவுவதை பேச்சிலிருந்து காணப்படுகிறது. அவர்கள் முயற்சிக்கலாம் என்று சந்தேகம் இருக்கிறது. எனவே அவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் கொண்ட பாதுகாப்பு வழங்க வேண்டும். முறையான இழப்பீடு வழங்க வேண்டும் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை கட்சியின் சார்பாக கோரிக்கை விடுக்கிறோம்.  

எந்த சாதி இன்னொரு சாதியை விட்டு திருமணம் செய்தாலும், கொலை நடக்கும் பிற சமூகத்தினருக்கும் இடையிலே நடக்கிற காதல் விவகாரங்களில் மட்டும் தான் இந்த ஆணவக் கொலைகள் நடப்பதாக நாம் கருதி கொண்டிருக்கிறோம். அது வேண்டுமானால் அதிகமாக இருக்கலாம். ஆனால் ஓபிசி சமூகத்திற்கு உள்ளேயே காதல் திருமணங்கள் நடந்தால் படுகொலைகள் நடக்கின்றன. அது இந்தியா முழுவதும் மதம் விட்டு மதம் திருமணம் செய்தாலும் சாதி விட்டு சாதி திருமணம் செய்தாலும் படுகொலைகள் நடப்பதை பார்க்க முடிகிறது. 

எனவே இது ஒட்டுமொத்தமாக சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடக்கிற படுகொலைகளை தடுப்பதற்கு ஆணவக் கொலைகள் தடுப்புச் சட்டம் தேவை. அதனால்தான் இந்திய ஒன்றிய அரசு இந்த சட்டத்தை இயற்ற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுவரையில் மாநில அரசுகள் உச்ச நீதிமன்றம் தந்திருக்கிற வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி காவல்துறையினர் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 

காவல் நிலையங்களில் மாற்றம் கொண்டுவர வேண்டும் 

சுபாஷினி பேசியதாக வீடியோ வெளியாகி உள்ளது. எனக்கும் கவினுக்கும் இருந்த உறவு எங்களுக்கு மட்டுமே தெரியும். எங்களோடு முடியட்டும் என்று அவர் சொல்லியிருக்கிறார். அவர் பேசியிருக்கிற போது பேசியிருக்கிற செய்திகளை பார்க்கும்போது அவருடைய உடல் மொழியை பார்க்கும்போது அவர் யாரோ ஒருவருடைய கட்டுப்பாட்டில் இருப்பதுபோன்று தெரிகிறது. அவர் அச்சுறுத்தலில் இருக்கிறார். யாரோ சொல்லச் சொல்லி சொல்கிறார் என எண்ண தோன்றுகிறது. 

அவர் சுதந்திரமாக பேசுவதாக தெரியவில்லை. எங்கள் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் தொடர்பில்லை என்று சொல்லக்கூடிய சுபாஷினி கவினுக்கு இப்படி ஒரு நிலை வந்திருக்கக் கூடாது என பெற்றோரிடம் கூறி சொல்லி தடுத்திருக்கலாம் அல்லது தனது உடல் பிறந்தவர்களிடம் கூறி தடுத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் சொன்னதாக நமக்கு தெரியவில்லை.

கவினை கொச்சைப்படுத்த வேண்டாம் 

சாதியவாத அமைப்புகள் சமூக ஊடகங்களை பயன்படுத்தி கவின் உடைய நடத்தையை கொச்சைப்படுத்தி கூடிய வகையில், அவதூறுகளை பரப்புகிறார்கள் இது தேவையற்ற சமூக பதட்டத்தை உருவாக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சைபர் கிரைம் காவல்துறை சமூக ஊடகங்களில் பரப்பப்படுகிற அவதூறு கருத்துக்களை கட்டுப்படுத்த வேண்டும் அவதூறு கருத்துக்களை பரப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என தொல். திருமாவளவன் தெரிவித்தார். 

மேலும் படிங்க: முக ஸ்டாலின் வீட்டில் ஓபிஎஸ்… அடுத்தது என்ன? – அரசியல் களத்தில் பரபரப்பு

மேலும் படிங்க: நெல்லை கவின் படுகொலை: குடும்பத்தினருக்கு ஆதரவாக நின்ற அரசியல் தலைகள் யார்?

 

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.