இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்ட அம்பயர்.. விதிமுறையை மீறினாரா?

Ind vs Eng 5th Test: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த ஜூன் மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு அந்நாட்டு அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையே இதுவரை 4 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது போட்டியில் வெற்றி அடைந்துள்ளது. இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 

இந்த நிலையில், இன்று (ஜூலை 31) இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது. தற்போது, வரை இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்பிற்கு 72 ரன்களை சேர்த்துள்ளது. ஜெய்ஸ்வால் 2 ரன்னிலும் கே.எல். ராகுல் 14 ரன்னிலும் ஆட்டமிழந்த நிலையில், சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் பேட்டிங் செய்து வருகின்றது.  

இங்கிலாந்துக்கு சாதகமாக செயல்பட்ட நடுவர்

இந்த சூழலில் தான், இங்கிலாந்து அணிக்கு சாதகமாக அம்பயர் தர்மசேனா செயல்பட்டதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். முன்னதாக இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வீரர் ஜோஸ் டாங் 13வது ஓவரில் ஒரு இன்ஸிவிங் யாக்ர்கரை வீசினார். இந்த பந்தை சாய் சுதர்சன் எதிர்கொண்டார். அப்போது அவர் கீழே விழுந்தார். இந்த நிலையில், எல்பிடபிள்யூ-வாக இருக்குமோ என நினைத்து இங்கிலாந்து அணி வீரர்கள் அனைவரும் சேர்ந்து நடுவரிடம் தர்மசேனாவிடம் அவுட் கேட்டார்கள். 

அப்போது, நடுவர் தர்மசேனா இங்கிலாந்துக்கு சாதகமாக சிக்னல் காட்டியதாக ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். பொதுவாக அதுபோன்ற சூழ்நிலையில் நடுவார்கள் அவுட் வழங்குவார்கள் அல்லது அவுட் இல்லை என்ற விதமாக தலையை அசைப்பார்கள் அல்லது அமைதியாக இருப்பார்கள். ஆனால், தர்மசேனா பேட்டில் பந்து பட்டதாக செய்கை காண்பித்துள்ளார். இதனால் சுதாரித்துக்கொண்ட இங்கிலாந்து அணி ரிவியூ எடுக்காமல் விட்டனர். பின்னர்  ரிப்ளையில் அம்பயர் தர்மசேனா செய்கை காட்டியதுபோல், பந்து சாய் சுதர்சனின் பேட்டில் உரசியது தெரிந்தது. 

விளாசும் ரசிகர்கள் 
 
இதனை இந்திய அணி ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். நடுவர் தர்மசேனா இங்கிலாந்து அணிக்கு சாதகமாக செயல்பட்டதாகவும் அவர் ஐசிசி விதிமுறையை மீறிவிட்டதாகவும் கடுமையாக சாடி வருகின்றனர். மேலும், இங்கிலாந்துக்கு எதிரான இப்போட்டியில் இந்திய அணி வென்றால்தான் தொடரை சமன் செய்யும் நிலை இருக்கும்போது, இப்படி இங்கிலாந்துக்கு சாதகமாக நடுவர் நடந்துக்கொள்வது சரி இல்லை என்றும் கூறி வருகின்றனர். 

மேலும் படிங்க: Ind vs Eng: கருண் நாயருக்கு மீண்டும் வாய்ப்பு.. இதுதான் காரணமா?

மேலும் படிங்க: அப்போ ஸ்ரேயாஸ், இப்போ கேஎல் ராகுல்.. டெல்லி பிளேயரை குறி வைக்கும் கேகேஆர்

 

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.