Ind vs Eng 5th Test: இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட அண்டர்சன் – டெண்டுல்கர் தொடரை விளையாடி வருகின்றனர். இதுவரை இத்தொடரில் 4 டெஸ்ட் போட்டி முடிவடைந்துள்ளது. அதில் இங்கிலாந்து அணி முதல் மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் வென்றுள்ளது. மான்செஸ்டரில் நடைபெற்ற நான்காவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில், இத்தொடரின் 5வது போட்டி ஜூலை 31ஆம் தேதி ஓவல் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. மைதானத்தில் பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருந்ததால், பெரிய ஸ்கோர்களை எட்டமுடியவில்லை. அதிகபட்சமாக கருண் நாயர் 57 ரன்களும் சாய் சுதர்சன் 38 ரன்களும் எடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி பேட்டிங் செய்தது. அந்த அணி 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜாக் கிராலி 64, பென் டக்கெட் 43 மற்றும் ஹாரி புரூக் 53 ரன்களை எடுத்திருந்தனர்.
இதையடுத்து 23 ரன்கள் பின்தங்கிய நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸ் பேட்டிங்கை தொடங்கி விளையாடி வருகிறது. கே.எல். ராகுல் 7 ரன்களிலும் சாய் சுதர்சன் 11 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் நைட் வாட்ச்மெனாக ஆகாஷ் தீப் களம் இறங்கினார். தொடர்ந்து இன்று தொடங்கிய போட்டியிலும் சிறப்பாக விளையாடி வந்தார். இங்கிலாந்து அணி பந்து வீச்சாளர்கள் ஆகாஷ் தீப்பின் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் திணறினர்.
ஆகாஷ் தீப் சாதனை
ஒரு கட்டத்தில் ஜேமி ஓவர்டன் வீசிய பந்தில் எதிர்பாராத விதமாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அரைசதத்தை கடந்த அவர், 66 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதில் 12 ஃபோர்கள் அடங்கும். இதன் மூலம் ஆகாஷ் தீப் சர்வதேச கிரிக்கெட்டில் முதல் அரைசதத்தை அடித்தார். இதனை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் உட்பட அனைவரும் கைதட்டியபடி பாராட்டினர். மேலும், ஹெல்மெட்டை கழற்றி அரைசதம் அடித்ததை கொண்டாடு. நீ அதற்கு தகுதியானவன் என கூறினர்.
ஆகாஷ் தீப் இப்போட்டியில் 66 ரன்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2வது அதிகபட்ச ரன்னை பதிவு செய்த இந்திய நைட் வாட்ச்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். முன்னதாக 2011ஆம் ஆண்டில் இதே இங்கிலாந்தில் அமித் மிஸ்ரா 84 ரன்களை அடித்து முதல் இடம் பிடித்தார். அவருக்கு பின்னர் தற்போது ஆகாஷ் தீப் உள்ளார்.
மேலும் படிங்க: இது லிஸ்ட்லயே இல்லையே.. சிஎஸ்கே அணிக்கு வரும் யார்க்கர் கிங்?
மேலும் படிங்க: ஸ்ரேயாஸ் ஐயர் காதலிகள் லிஸ்ட்.. யுஸ்வேந்திர சஹாலின் EX-மனைவியுமா?