உள்நாட்டு பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல்

வாராணசி: உத்தர பிரதேசத்​தின் வாராணசி​யில் நேற்று நடை​பெற்ற அரசு நலத்​திட்ட விழா​வில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றார். அப்​போது ரூ.2,200 கோடி மதிப்​பிலான பல்​வேறு திட்​டங்​களை அவர் தொடங்​கி​ வைத்​தார்.

விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இன்​றைய தினம் பிரதமரின் கிசான் சம்​மான் நிதி திட்​டத்​தின் மூலம் நாடு முழு​வதும் 10 கோடி விவ​சா​யிகளின் வங்​கிக் கணக்​கு​களில் ரூ.20,500 கோடி செலுத்​தப்​பட்டு உள்​ளது. விவ​சா​யிகளுக்​கான நிதி​யுதவி திட்​டம் விரை​வில் நிறுத்​தப்​படும் என்று காங்​கிரஸ், சமாஜ்​வாதி உள்​ளிட்ட கட்​சிகள் விமர்​சனம் செய்​தன. ஆனால் இந்த திட்​டம் இன்​று​வரை வெற்​றிகர​மாக செயல்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

விவ​சா​யிகளின் நலன் கருதி தன்​-தன்யா கிரிஷி யோஜனா என்ற புதிய திட்​டம் தொடங்​கப்​பட்டு உள்​ளது. இதன்​மூலம் பின்​தங்​கிய மாவட்​டங்​களில் வேளாண் உற்​பத்தி அதி​கரிக்​கப்​படும். இந்​தத் திட்​டத்​துக்​காக ரூ.24,000 கோடி செல​விடப்​படும். வேளாண்மை சார்ந்த பொருளா​தா​ரத்​தில் பெண்​களின் பங்​களிப்பை அதி​கரிக்க லட்​சா​திபதி சகோ​தரி​கள் திட்​டத்தை மத்​திய அரசு செயல்​படுத்தி வரு​கிறது. இதன்​மூலம் 3 கோடி லட்​சா​திபதி பெண்​களை உரு​வாக்க இலக்கு நிர்​ண​யிக்​கப்​பட்டு உள்​ளது.

மக்​களின் கடமை: நாம் வெகு​விரை​வில் உலகின் 3-வது பெரிய பொருளா​தார நாடு என்ற பெரு​மையை எட்ட உள்​ளோம். இந்த நேரத்​தில் நமது இளைஞர்​களின் வேலை​வாய்ப்பு மிக​வும் முக்​கிய​மானவை. இதை கருத்​தில் கொண்டு மத்​திய அரசு செயல்​பட்டு வரு​கிறது. நாட்​டின் மக்​களுக்​கும் சில கடமை​கள், பொறுப்​பு​கள் உள்​ளன. அதாவது நாடு முழு​வதும் உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே விற்க வேண்​டும். உள்​ளூர் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று மக்​கள் உறு​தி​யேற்க வேண்​டும். நமது வீட்​டுக்​காக எந்த பொருளை வாங்​கி​னாலும் அது உள்​நாட்டு தயாரிப்​பாக மட்​டுமே இருக்க வேண்​டும். இந்​திய தொழிலா​ளர்​களின் வியர்​வைக்கு மதிப்​பளிக்க வேண்​டும்.

இந்த நேரத்​தில் இந்​திய வணி​கர்​களிடம் சிறப்பு வேண்​டு​கோளை முன்​வைக்​கிறேன். இப்​போது நிலை​யற்ற சூழலைக் கடந்து சென்று கொண்​டிருக்​கிறோம். எனவே சிறிய கடை முதல் பெரிய நிறு​வனங்​கள் வரை உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே விற்​பனை செய்ய வேண்​டும். அடுத்து வரும் மாதங்​கள் பண்​டிகை காலம் ஆகும். குறிப்​பாக வரும் அக்​டோபரில் தீபாவளியை கொண்​டாட உள்​ளோம். திருமண சீசனும் வரு​கிறது. பண்​டிகை மற்​றும் திருமண சீசனில் உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும்.

வெளி​நாடு​களுக்கு சென்று திரு​மணம் செய்து நமது நாட்​டின் செல்​வத்தை வீணடிக்க வேண்​டாம் என்று அறி​வுறுத்​தினேன். எனது அறி​வுரையை ஏற்று பலரும் உள்​நாட்​டிலேயே திருமண விழாக்​களை நடத்​துகின்​றனர். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்​கிறது. தேசத்​தந்தை மகாத்மா காந்​தி​யின் சுதேசி இயக்​கம், சுதந்​திர போராட்​டத்​தில் மிக முக்​கிய பங்கு வகித்​தது. சுதேசி இயக்​கத்​தின்​படி உள்​நாட்டு பொருட்​களை வாங்​கு​வது காந்​தி​யடிகளுக்கு நாம் செலுத்​தும் மரி​யாதை ஆகும். அனை​வரும் ஒன்​று​பட்டு உழைத்​தால் மட்​டுமே வளர்ந்த இந்​தியா என்ற லட்​சி​யத்தை நிச்​சய​மாக எட்ட முடி​யும். இவ்​வாறு பிரதமர் நரேந்​திர மோடி பேசி​னார்.

இந்​திய பொருட்​கள் மீது அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 25 சதவீத வரியை விதித்​துள்​ளார். இந்த சூழலில் உள்​நாட்​டில் தயாரிக்​கப்​படும் பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்​திருப்​பது மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.