சாதிய கொலைகளுக்கு எதிராக சிறப்பு சட்டம்: செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்

தூத்துக்குடி: ​சா​திய வன்​கொடுமை கொலைகளுக்கு எதி​ராக சிறப்பு சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தமிழக காங்​கிரஸ் தலைவர்கு.செல்​வப்​பெருந்​தகை கூறி​னார். நெல்​லை​யில் கொல்​லப்​பட்ட ஐ.டி. ஊழியர் கவின் செல்​வகணேஷ் வீடு தூத்​துக்​குடி மாவட்​டம் ஆறு​முகமங்​கலத்​தில் உள்​ளது. இங்கு வந்த செல்​வப்​பெருந்​தகை கவின் செல்​வகணேஷின் பெற்​றோருக்கு ஆறு​தல் கூறினார். பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது:

கல்​வி​யில் சிறந்து விளங்​கிய இளைஞரை படு​கொலை செய்​துள்​ளனர். இது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. எனவே​தான் சாதிய வன்​கொடுமை படு​கொலைக்கு எதி​ராக சட்​டம் இயற்ற வேண்​டும் என்று தொடர்ந்து வலி​யுறுத்தி வரு​கிறோம். விரை​வில் சட்​டப்​பேர​வையைக் கூட்டி இந்த சட்​டத்தை இயற்ற வேண்​டும்.

கவின் குடும்​பத்​துக்கு தக்க பாது​காப்பு அளிக்க வேண்​டும். அவரது தம்​பிக்கு அரசு வேலை​வாய்ப்பு வழங்க வேண்​டும். அவரது குடும்​பத்தை மிரட்​டிய காவல் ஆய்​வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்​டும். இந்த கொலை​யில் வேறு யாருக்​கும் தொடர்பு உள்ளதா என்று விசா​ரிக்க வேண்​டும். சிபிசிஐடி விசா​ரணை​யில் எங்​களுக்கு நம்​பிக்கை உள்​ளது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.