தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகவும் பெரிய அளவிலான வாக்காளர் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சமீபத்திய தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் நியாயத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ள ராகுல் காந்தி “மகாராஷ்டிராவில் தேர்தல்களைத் திருட தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டுச் சேர்ந்தது” என்றும் கூறினார். வாக்காளர் பட்டியலில் நடைபெற்றுள்ள மோசடி குறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ராகுல் காந்தி, மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் சமீபத்தில் நடந்த வாக்குப்பதிவு குறித்து […]
