Apple iPhone 17 Series India Launch: ஆப்பிள் பிரியர்களுக்கு வரவிருக்கும் ஐபோன் 17 தொடர் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கின்றனர். இந்த போன் ஒரு பெரிய புதிய வடிவமைப்பைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குபெர்டினோவை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான குபெர்டினோ இன்னும் அதன் அதிகாரப்பூர்வ வெளியீட்டு அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், வெளியீட்டு நிகழ்வு அடுத்த மாதம் செப்டம்பர் 3 ஆம் தேதி அல்லது செப்டம்பர் 9 ஆம் தேதி அன்று நடக்கக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் இந்த போனின் வெளியீட்டு நிகழ்வுக்கு முன்னதாக, இந்த ஒருசில தகவல்கள் சந்தையில் கசிவுந்துள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் ஆர்வம் இன்னுமும் அதிகரித்துள்ளன. விலை உயர்வாக இருந்தபோதிலும், புதிய மேம்படுத்தல்கள் மற்றும் அதிக சேமிப்பிடம் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸை இந்த ஆண்டு சிறந்த தேர்வாக மாற்றும் என்று ஆப்பிள் பிரியர்கள் நம்புகின்றனர்.
இந்த வருடத்தின் மிகவும் சக்திவாய்ந்த ஐபோன்களில் ஒன்றான ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் இருக்ககூடும் என்று கருதப்படுகின்றன. இதன் வடிவமைப்பு, செயல்திறன், கேமரா மற்றும் AI தொடர்பான பல முக்கிய மேம்படுத்தல்களை காணலாம். அதுமட்டுமின்றி இதன் கேமரா மற்றும் AI அம்சங்கள் சந்தையில் ஒரு புதிய தரத்தை அமைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகையில் நீங்கள் உங்களின் பழைய ஐபோனிலிருந்தை இன்னுமும் மேம்படுத்த விரும்பினால், இந்த ஆண்டு ப்ரோ மாடல்கள் உங்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கலாம்.
iPhone 17 விலை நிலவரம்:
ஐபோன் 17 விலை உயர்த்தப்படுவது இது முதல் முறை அல்ல. வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிக்கையும் ஆப்பிள் வரவிருக்கும் ஐபோன்களின் விலையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறியது. வடிவமைப்பு மற்றும் அம்சங்களில் செய்யப்பட்ட பெரிய மாற்றங்களுக்குப் பிறகு, இதன் விலையை சிறிது அதிகரிக்க வேண்டியது அவசியம் என்று நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. எனினும் இந்த ஆண்டு அடிப்படை மாடல்கள் ப்ரோ மாடல்களைப் போல பெரிய மேம்பாடுகளை கொண்டு வராமல் போகலாம்.
ப்ரோ மாடல்களில் அதிக ஸ்டோரேஜ்
இதில் மிக முக்கியமான மாற்றம் ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸில் காணப்படும். இந்த இரண்டு மாடல்களின் அடிப்படை மாறுபாடும் இப்போது 256 ஜிபி சேமிப்பகத்துடன் வரும், முன்னதாக 128 ஜிபி ஆக இருந்த இதன் ஸ்டோரேஜ் இப்போது கூடுதாகும். இதன் மூலம் அதிக புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பயன்பாடுகளை சேமிக்கும் பயனர்களுக்கு கவலையின்றி உபயோகிக்க முடியும்.
இந்தியாவில் அறிமுக தேதி
ப்ளூம்பெர்க்கின் மார்க் குர்மன் மற்றும் பிற அறிக்கைகளின்படி, ஆப்பிள் ஐபோன் 17 தொடரை செப்டம்பர் 9, 2025 அன்று அறிமுகப்படுத்தும், அதே மாதத்தில் விற்பனை தொடங்கப் படலாம். இந்தியாவில் ஐபோன் 17 ப்ரோவின் ஆரம்ப விலை சுமார் ₹1,45,000 ஆகவும், ப்ரோ மேக்ஸ் விலை ஏறக்குறைய ₹1,64,990 ஆகவும் இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஐபோன் 17 ப்ரோவில் 48 மெகாபிக்சல் கேமரா
ஐபோன் 17 ப்ரோவில் உள்ள மூன்று பின்புற கேமரா சென்சார்களும் 48 மெகாபிக்சல்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது, இது முந்தைய மாடலை விட பல மடங்கு சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும். இது தவிர, ஃப்ரண்ட் கேமராவையும் 24MP ஆக மேம்படுத்தலாம்.
ஐபோன் 17 ப்ரோ அம்சங்கள்:
டிஸ்ப்ளே: 6.3-இன்ச் LTPO OLED திரை, 120Hz ப்ரோமோஷன் புதுப்பிப்பு வீதம்
சிப்செட்: புதிய A19 ப்ரோ செயலி, 12GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ்
கேமரா: மூன்று 48MP பின்புற கேமராக்கள் (அகலம், அல்ட்ரா-வைட், டெலிஃபோட்டோ) மற்றும் 24MP முன் கேமரா
வடிவமைப்பு: புதிய கிடைமட்ட கேமரா பார், அலுமினிய பிரேம் மற்றும் பிரதிபலிப்பு எதிர்ப்பு திரை