ராமேஸ்வரம்: பிரதமர் மோடி திறந்துவைத்த பாம்பன் தூக்கு பாலத்தில் அடுத்தடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டு ரயில் போக்குவரத்து தாமதம் ஏற்படுவதால், ரயில் பயணிகள் அவதி அடைந்துள்ளனர். பாலம் முறையாக கட்டப்பட்டதா என கேள்வி எழுப்பி உள்ளனர். ராமேஸ்வரத்தில் பாம்பன் கடலின் நடுவே ரூ.545 கோடியில் சுமார் 2 கிலோ மீட்டர் நீளத்திற்கு கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தின் மையப் பகுதியில் கப்பல்கள் கடந்து செல்லும்போது திறந்து மூடும் வகையில் 77 மீட்டர் நீளமும், 650 டன் […]
