அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை: ரணில் விக்ரமசிங்கே கைதுக்கு ராஜபக்சே கண்டனம்

கொழும்பு,

அரசு நிதியை தவறாக பயன்படுத்தியதாக சாட்டப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் இலங்கையில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. அவரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதால் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவர்கள் பரிந்துரைத்ததையடுத்து அவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ரணில் விக்ரமசிங்கவை சிறைச்சாலை மருத்துவமனையில் சென்று சந்தித்து பேசினார் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,“அரசியலில் இருப்பவர்கள் வழக்குகளை எதிர்கொள்வது சாதாரண விஷயம்தான். ரணில் அதனை மன உறுதியுடன் எதிர்கொள்கிறார்.

அவர் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இது அரசியலின் ஒரு பகுதி. அவருக்கு எந்த பெரிய உடல்நலப் பிரச்சினையும் இல்லை. சிறிய தவறுக்காக சிறையில் வைக்கப்பட்டிருப்பது வருத்தமாக உள்ளது. இதுபோன்ற நடவடிக்கைகள் பழிவாங்கும் நோக்கத்தைக் காட்டுவதாகவே தோன்றுகிறது. மக்கள் இதை நன்கு புரிந்துகொண்டு விட்டனர்” என்று கூறினார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.