மும்பை: விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் இரவு மும்பை சென்றார்.
தெற்கு மும்பையில் உள்ள சகயாத்ரி விருந்தினர் இல்லத்தில் தங்கியிருந்த அவரை துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, மாநில பாஜக தலைவர் ரவீந்திர சவாண் உள்ளிட்டோர் நேற்று காலையில் சந்தித்தனர்.
இதையடுத்து அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை அவரது இல்லத்தில் சந்தித்தார். விநாயகர் சதுர்த்தி திருவிழாவின்போது மும்பை லாக்பாக் பகுதியில் ‘லால்பாக்சா ராஜா’ பந்தலில் வைக்கப்படும் விநாயகர் சிலை மிகவும் புகழ்பெற்றது. இந்த விநாயகரை மத்திய அமைச்சர் அமித் ஷா நேற்று தனது குடும்பத்தினருடன் வழிபட்டார்.
முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர். மேற்கு பாந்த்ரா மற்றும் கிழக்கு அந்தேரியில் உள்ள விநாயகர் பந்தல்களுக்கும் சென்று அமித் ஷா வழிபட்டார்.