இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திரங்கள் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இவர்கள் இருவரும் டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடி வருபவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடும் எண்ணத்தில் இருப்பதாக கூறப்பட்டாலும், அப்போது 39, 40 வயதில் இருவராலும் நல்ல ஃபிட்னெஸ் மற்றும் சிறந்த ஃபார்மில் இருக்க முடியுமா என்பது சந்தேகமாகும்.
Add Zee News as a Preferred Source
இதையொட்டி, 2027 உலகக் கோப்பையில் சுப்மன் கில் தலைமையிலான இளம் புதிய அணியை தேர்வுக் குழு விரும்பி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அடுத்து வரும் அக்டோபரில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருடன் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவை பிசிசிஐ கழற்றி விடும் எனவும் கூறப்பட்டாலும், பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா இதை சமீபத்தில் மறுத்துள்ளார்.
உண்மையில் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் தொடர்ந்தும் விளையாட விரும்பினாலும், பிசிசிஐ அவர்களை கழற்றி புதிய இளம் அணியை களமிறக்கியது. இந்த நிலையில், டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற இவர்கள் இனிமேல் அடுத்த 10 மாதங்களில் 10 ஒருநாள் போட்டிகளில்தான் பங்கேற்கப்போகிறார்கள் என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
மேலும், தொடர்ந்து விளையாடி சிறந்த ஃபார்மில் தங்களை வைத்திருக்க கஷ்டம் என்பதால், 2027 உலகக் கோப்பையில் இருவரும் களமிறங்குவார் என்பதில் 100% உறுதியில்லை என்றும் அவர் கவலை வெளிப்படுத்தினார்.
இது தொடர்பாக பேசிய ஆகாஷ் சோப்ரா, “2027 உலகக் கோப்பை தெனாப்பிரிக்காவில் நடைபெறுகிறது. அங்கு அனுபவமும் திறனும் தேவை. அதற்கு முன் நீண்ட பயணம் இருக்கிறது. அவர்களுக்கு வாய்ப்பு இருக்கும் என்றாலும், அவர்கள் இதை அணுகுவதில் கவனமாக இருக்க வேண்டும். இவர்கள் கிரிக்கெட்டில் அதிகம் கலந்துகொள்ள வேண்டும். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக விளையாடினால் வாய்ப்புகள் அதிகரிக்கும். ஆனால் அவர்கள் ஏன் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு எடுத்தார்கள் என்பது எனக்குத் புரியவில்லை. 2 மாதம் ஐபிஎலில் விளையாடி பிறகு 10 மாதங்களில் 10 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே பங்கேற்கப்போகிறார்கள் என்பதும் புரிந்துகொள்ள சிரமமாக இருக்கிறது” என அவர் கூறினார்.
இதன் மூலம் விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் 2027 உலகக் கோப்பையில் இணைந்து விளையாடுவார்கள் என்பது உறுதியில்லை என்பதையும், இளம் அணியின் கீழ் புதிய மாற்றங்கள் நிகழவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
About the Author
R Balaji