CSK: சிஎஸ்கே இந்த வீரரை விடவே விடாது… மினி ஏலத்தில் பிளான் இதுதான்!

Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த 2025 ஐபிஎல் (IPL 2025) சீசனில் கடைசி இடத்தில் நிறைவு செய்தது. சிஎஸ்கேவின் 16 ஆண்டுகால ஐபிஎல் வரலாற்றில் இதுவே முதல்முறையாக அந்த அணி கடைசி இடத்தில் நிறைவு செய்திருக்கிறது.

Add Zee News as a Preferred Source

Chennai Super Kings: சிஎஸ்கே இந்த வீரர்களை தூக்கும்

பேட்டிங், பந்துவீச்சு, பிளேயிங் காம்பினேஷன் என சிஎஸ்கேவில் (CSK) கடந்த சீசனில் எக்கச்சக்க சிக்கல் இருந்தது. இதுவே, சிஎஸ்கே கடந்த சீசனில் படுதோல்வி அடைய முக்கிய காரணம். மேலும், 2025 சீசன் நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே டெவால்ட் பிரெவிஸ், ஆயுஷ் மாத்ரே, உர்வில் பட்டேல் போன்ற இளம் வீரர்களை கண்டடைந்து பேட்டிங்கில் ஓரளவு பிரச்னையை போக்கி உள்ளது. தற்போது அஸ்வினும் ஓய்வை அறிவித்திருப்பதால் பர்ஸில் பெரிய தொகை வர அதிக வாய்ப்புள்ளது, இதன்மூலம் சுழற்பந்துவீச்சு ஆல்-ரவுண்டரை தூக்கவும் சிஎஸ்கே திட்டமிடும். 

மறுமுனையில் வெளிநாட்டு ஓபனர் மற்றும் வெளிநாட்டு ஆல்-ரவுண்டர் சிக்கலும் சிஎஸ்கேவில் நீடிக்கிறது. தற்போது சிஎஸ்கேவில் டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கரன், ஜேமி ஓவர்டன், நூர் அகமது, நாதன் எல்லிஸ், மதீஷா பதிரானா என 7 வெளிநாட்டு வீரர்கள் இருக்கிறார்கள். இன்னும் 1 வெளிநாட்டு வீரரை கூட சேர்க்கலாம். இதில், வரும் மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் கிளென் மேக்ஸ்வெல் விடுவித்தால் அவரையோ அல்லது கேம்ரூன் கிரீன், மிட்செல் ஓவன் போன்ற ஆல்-ரவுண்டர்களை எடுக்க சிஎஸ்கே திட்டமிடும் எனலாம். ஓபனர் வேண்டுமென்றால் பென் டக்கெட், டிம் சீஃபர்ட் உள்ளிட்டோரில் ஒருவரை எடுக்க வாய்ப்புள்ளது.

Chennai Super Kings: டெவான் கான்வே அல்லது ரச்சின் ரவீந்திரா

இந்நிலையில், மினி ஏலத்தில் சில வீரர்களை விடுவிக்க வேண்டிய கட்டாயத்திலும் சிஎஸ்கே உள்ளது. அடிப்படை தொகையில் அணியில் இருக்கும் வீரர்கள் பெரும்பாலும் தப்பித்துவிடுவார்கள். வெளிநாட்டு வீரர்களை பொருத்தவரை நூர் அகமது, நாதன் எல்லிஸ், மதீஷா பதிரானா ஆகியோரின் இடம் கண்டிப்பாக உறுதி எனலாம். 

கான்வே (ரூ.6.25 கோடி) மற்றும் ரச்சின் ரவீந்திரா (ரூ.4 கோடி) ஆகியோரில் ஒருவரை விடுவிக்க வேண்டிய நிர்பந்தம் தற்போது உள்ளது. இருவருமே கடைசி இரண்டு சீசனில் சிறப்பாக விளையாடவில்லை. ஆனால், ரச்சின் இளம் வீரர் என்பதாலும், ஒப்பீட்டளவில் குறைந்த தொகையை பெறுகிறார்  என்பதாலும் கான்வே விடுவிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.

Chennai Super Kings: சாம் கரன் அல்லது ஜேமி ஓவர்டன்

மறுபுறம் ஆல்-ரவுண்டர்களில் சாம் கரன் (ரூ.2.40 கோடி) மற்றும் ஜேமி ஓவர்டன் (ரூ.1.50 கோடி) ஆகியோரில் ஒருவரை நீக்கியாக வேண்டும். இருவருக்கும் கடந்த சீசனில் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும் இருவருமே பெரியளவில் சொதப்பினர். எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை. ஆனால், சாம் கரன் தற்போது டி20 லீக் தொடர்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். 

Chennai Super Kings: சாம் கரன் நிச்சயம் இருப்பார்

சமீபத்தில் நிறைவடைந்த The Hundred தொடரில் 8 இன்னிங்ஸில் 238 ரன்களை 176.29 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். பந்துவீச்சிலும் 12 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். சிறப்பான பார்மில் இருப்பதால் தென்னாப்பிரிக்கா மற்றும் அயர்லாந்து உடனான டி20 தொடர்களில் இங்கிலாந்து அணியில் சாம் கரன் சேர்க்கப்பட்டிருக்கிறார். அடுத்தடுத்து நடைபெறும் ILT20, SA20, ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர்களில் சாம் கரன் தடம் பதிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சிஎஸ்கே நூர் அகமது, நாதன் எல்லிஸ், மதீஷா பதிரானா ஆகியோரை போல் சாம் கரனையும் தக்கவைக்கும் எனலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.