சென்னை: திமுக கூட்டணிக் கட்சி என்றால் டிஜிபி அலுவலக வாயிலில் ரவுடித்தனத்தில் ஈடுபடலாமா? ஏர்போர் மூர்த்திமீதான விசிக தாக்குதலை சுட்டிக்காட்டி பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர், அண்ணன் திரு. ஏர்போர்ட் மூர்த்தி அவர்கள் மீது, டிஜிபி அலுவலக வாயிலில் வைத்து, காவல்துறையினர் கண்முன்னே, விசிக கட்சியினர் தாக்குதல் நடத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஜனநாயக நாட்டில், எதிர்க்கருத்தை எதிர்கொள்ள இயலாத கோழைகள்தான், […]
