மும்பையை சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு ஒரு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது மகன் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார். அவரது மகள் சாரா டெண்டுல்கர் INFLUENCER ஆக உள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதன் மூலம் எப்போதும் செய்திகளில் இடம் பிடித்து வருகிறார். சாரா டெண்டுல்கரும், இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், சாரா டெண்டுல்கர் வேறொரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
Add Zee News as a Preferred Source
யார் அந்த மர்ம நபர்?
சாரா டெண்டுல்கர் உடன் இருக்கும் நபர் வேறு யாரும் இல்லை… கோவாவை சேர்ந்த சித்தார்த் கேர்கர் என்ற கலைஞர் தான். இவருடன் இருக்கும் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. கோவாவில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் இந்த புகைப்படங்கள், இருவரும் காதலில் இருக்கிறார்களா என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக சித்தார்த் கேர்கர், டெண்டுல்கர் குடும்பத்துடன் நெருங்கிய உறவில் இருப்பதும் தெரிய வந்துள்ளது.
சித்தார்த் கேர்கர், சச்சின் மற்றும் அஞ்சலி டெண்டுல்கருடன் பல பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும், சாரா டெண்டுல்கருடன் மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த பல ஐபிஎல் போட்டியை பார்த்துள்ளார். இந்த புகைப்படங்களும் தற்போது வைரல் ஆகி உள்ளன. இருப்பினும், வைரலாகும் புகைப்படங்கள் சில வருடங்கள் பழையவை என்றும், அவை தற்போது மீண்டும் பரப்பப்பட்டு வதந்திகளுக்கு வழிவகுத்துள்ளதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
சாரா டெண்டுல்கரை தொடரும் கிசுகிசுக்கள்
சாரா டெண்டுல்கரின் பெயர் காதல் கிசுகிசுக்களில் சிக்குவது இது முதல் முறையல்ல. இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் சுப்மன் கில்லுடன் அவர் காதலில் இருப்பதாக நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. இருவரும் பொதுவெளியில் ஒன்றாக காணப்படாவிட்டாலும், அவர்களது சமூக வலைதள பதிவுகள் இந்த வதந்திகளுக்கு அவ்வப்போது தீனி போட்டன. இருப்பினும், சுப்மன் கில் சமீபத்தில் தான் யாரையும் காதலிக்கவில்லை என்று தெளிவுபடுத்தி உள்ளார். கில் மட்டும் இல்லாமல், பாலிவுட் நடிகர் சித்தாந்த் சதுர்வேதியுடன் சாராவுக்கு காதல் மலர்ந்ததாக செய்திகள் வெளியாகின. இருப்பினும் சில வாரங்களிலேயே அந்த உறவு முறிந்து விட்டதாகவும் கூறப்பட்டது.
சாராவின் காதலன் யார்?
சமீபத்தில் அர்ஜுன் டெண்டுல்கரின் நிச்சயதார்த்தம் குறித்த செய்திகள் வெளியானதை தொடர்ந்து, சாரா டெண்டுல்கர் பற்றிய பேச்சுக்கள் இணையத்தில் அதிகரித்துள்ளன. சித்தார்த் கேர்கருடனான காதல் உறவு குறித்து சாரா டெண்டுல்கர் இதுவரை எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. இருவரும் நல்ல நண்பர்களாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருபுறம் இது போன்ற வதந்திகள் வந்தாலும், சாரா சமீபத்தில் மும்பையில் சொந்தமாக ஒரு பைலேட்ஸ் ஸ்டுடியோவை தொடங்கியுள்ளார். மேலும், தனது தந்தையின் அறக்கட்டளையின் இயக்குநராகவும், ஆஸ்திரேலியாவின் அம்பாசிடராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். பயோமெடிக்கல் அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சாரா, நடிப்பில் ஆர்வம் காட்டவில்லை என்றாலும், சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களை கொண்டுள்ளார்.
About the Author
RK Spark