வாஷிங்டன்,
உலகின் முன்னணி செல்போன் உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் ஆண்டு தோறும் தனது வருடாந்திர நிகழ்வில் தனது நிறுவன செல்போன்கள் மற்றும் ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட சாதனங்களின் புதிய அப்டேட்களை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், ஆப்பிள் நிறுவனத்தின் பிரத்யேக நிகழ்வு இந்திய நேரப்படி 10.30 மணிக்கு தொடங்கியது.
“Awe-dropping” என்ற இந்த நிகழ்வில் ஐபோன் 17 சீரிஸ் அறிமுகமாக உள்ளது. இணையத்தில் அதிகம் பேசப்பட்டு வந்த இந்த மாடல்கள், இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டன.
இந்த முறை ஐபோன் சீரிசில் பெரிய மாற்றம் இருக்கலாம். ஐபோன் 17, ஐபோன் 17 ஏர், ஐபோன் 17 ப்ரோ, மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் என 4 புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.
Live Updates
-
10 Sept 2025 1:22 AM IST
ஐபோன் 17 ஏர் மாடல் 5.6 மில்லிமீட்டர் தடிமன் கொண்டது. இது ஐபோன் 16 ப்ரோ மாடலை விட சுமார் மூன்றில் ஒரு பங்கு மெல்லியதாக உள்ளது. இதன் எடை 165 கிராம் ஆகும். இந்த புதிய ஐபோனில் 6.6 இன்ச் ப்ரோமோஷன் டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இது இலகுரக டைட்டானியம்-அலுமினியம் பிரேமால் சூழப்பட்டுள்ளது. மேலும், இந்த பிரேம் செராமிக் ஷீல்ட் 2 ஆல் பாதுகாக்கப்படும்
-
10 Sept 2025 1:22 AM IST
முக்கியமான வசதிகள் என்று பார்த்தால் ஐபோன் ஏர் மாடலில் வயர்லாஸ் மேக்சேஃப் சார்ஜிங் வசதி மற்றும் நீடித்த பேட்டரி லைஃப் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபோன்17 மாடலில் மெயின் கேமரா 48 மெக பிக்ஷல் அல்ட்ரா வெய்டு மற்றும் 12 மெகா பிக்ஷல் மேக்ரா கேமரா வசதிகளுடன் வந்துள்ளது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்களில், ஃபோனின் முழு அகலத்திற்கும் பரவும் வகையில் புதிய கேமரா வடிவமைப்பு இடம்பெறும். * 48 மெகாபிக்சல் கேமராவில் 1x, 2x, 4x, மற்றும் 8x ஆப்டிகல் ஜூம் கொண்ட டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும். மேலும், இது 8K தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யும் திறன் கொண்டது. இந்த இரண்டு ப்ரீமியம் மாடல்களிலும் அதிவேக இணைப்பு வசதிக்காக, ஆப்பிள் வடிவமைத்த வைஃபை 7 சிப் பொருத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் மாடல்கள் பிரகாசமான டிஸ்ப்ளேக்களைக் கொண்டிருக்கும் என்றும், 39 மணி நேரம் வரை வீடியோ பிளேபேக் ஆதரவை வழங்கும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
-
9 Sept 2025 11:46 PM IST
ஐபோன் 17, ஐபோன் ஏர், ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ் விலை அறிவிக்கப்பட்டுள்ளது
ஆப்பிளின் புதிய ஐபோன் 17, 128 ஜிபி ஸ்டோரஜ் வசதி கொண்ட கூடிய அடிப்படை மாடலின் விலை $799 ஆக இருக்கும். ( இந்திய மதிப்பில் ₹66,727)
அதே நேரத்தில் ஐபோன் ஏர் $899 ( ₹75,000) இல் தொடங்குகிறது. ஐபோன் 17 ப்ரோ மற்றும் ஐபோன் 17 ப்ரோ முறையே $1,099 ( ₹91,767) மற்றும் $1,199 இல் தொடங்குகின்றன.
முன்பதிவு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கும் எனவும் செப்டம்பர் 19 முதல் விற்பனைக்கு கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
9 Sept 2025 11:34 PM IST
ஐபோன் ஏர் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாடல் 5.6 மி.மி என்ற அளவில் மிகவும் மெல்லிய வடிவத்தில் உள்ளது. ஐபோன்களிலேயே மிகவும் மெல்லிய போனாக இதுவே உள்ளது. ஐபோன் ஏர் மாடல் 6.5 இன்ச் டிஸ்பிளேவுடனும், செராமிக் ஷீல்டுடனும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ஒரேயெரு கேமரா மட்டுமே இடம் பெற்றுள்ளது.
-
9 Sept 2025 11:08 PM IST
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11, ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3, ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 விலை வெளியாகியுள்ளது.
அதன் விவரம்
ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 11 $399 ₹33,317
ஆப்பிள் வாட்ச் எஸ்இ 3 $249 ₹20,792
ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 3 $799 ₹66,727