நேபாளத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு: இடைக்கால பிரதமராக சுசீலா பொறுப்பேற்பு

காத்மாண்டு: நேபாள நாட்​டில் ‘ஜென் ஸி’ இளைஞர்​கள் நடத்​திய தீவிர போராட்​டங்​களால் பிரதமர் கே.பி.சர்மா ஒலி(73) தலை​மையி​லான கம்​யூனிஸ்ட் அரசு கவிழ்ந்​தது. இதனால் அந்​நாட்​டில் அரசி​யல் குழப்​பம் ஏற்​பட்​டுள்​ளது. இந்​நிலை​யில், நாட்​டின் இடைக்​கால பிரதம​ராக யாரை தேர்வு செய்​வது என்​பது தொடர்​பாக தொடர் ஆலோ​சனை​கள் மேற்​கொள்​ளப்​பட்டு வந்​தன. நேபாள ராணுவத் தளபதி அஷோக் சிக்​டெல், இது தொடர்​பாக ஆலோ​சனை​களை மேற்​கொண்டு வந்​தார்.

இதனிடையே, நேபாளத்​தின் இடைக்​கால பிரதம​ராக நேபாள உச்ச நீதி​மன்​றத்​தின் முன்​னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி பதவி​யேற்க, போராட்​டக்​காரர்​கள் ஒரு​மனதாக ஆதரவு தெரி​வித்​துள்​ளனர். நாட்​டின் இடைக்​கால பிரதம​ராக பதவி​யேற்க அவரும் சம்​மதம் தெரி​வித்​துள்​ளார்.

எனினும், நாடாளு​மன்​றம் கலைக்​கப்பட வேண்​டுமா என்​பது குறித்து கருத்து வேறு​பாடு​கள் இருப்​ப​தாகக் கூறப்​பட்டது. அதன் காரண​மாகவே, இடைக்​கால அரசை அமைப்​ப​தில் தாமதம் ஏற்​படு​வ​தாகத் தகவல் வெளி​யானது. இந்​நிலை​யில், இடைக்​கால பிரதம​ராக சுசீலா கார்​கியை தேர்வு செய்ய நேபாள அதிபர் பவுடேல் நேற்று ஒப்​பு​கொண்​டுள்​ளனர். மேலும் நாடாளுமன்றத்தை கலைத்து நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்யவும் அவர் ஒப்புதல் அளித்துள்ளார்.

காத்​மாண்​டு​வில் உள்ள அதிபர் அலு​வல​கத்​தில் நேற்று நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யின்​போது, இடைக்​கால பிரதம​ராக சுசீலா கார்​கி பதவி​யேற்க ஒப்​புதல் தரப்​பட்​டது. இதைத் தொடர்ந்து நேற்று இரவு 9 மணிக்கு இடைக்​கால பிரதமராக சுசீலா கார்​கி பொறுப்​பேற்​றுக்​கொண்​டார்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.