17வது ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், யுஏஇ, ஓமன், ஹாங்காங் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்றுள்ளன. இதுவரை இத்தொடரில் 7 போட்டிகளில் நிறைவடைந்துள்ளன. இதில், இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளன. முதல் போட்டியில் யுஏஇ அணியை எதிர்த்தும் இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகவும் விளையாடி உள்ளது.
Add Zee News as a Preferred Source
யுஏஇ அணியை எளிதில் வீழ்த்தில் அபார வெற்றியை பெற்ற இந்திய அணி இரண்டாவது போட்டியிலும் சிறப்பாக விளையாடியது. நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா சேஸ் செய்து வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் 20 ஓவர்கள் முடிவில், 9 விக்கெட்கள் இழப்பிற்கு 127 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அதிகபட்சமாக ஃபர்கான் 40 ரன்களும் ஷாஹீன் அப்ரிடி 33 ரன்களும் அடித்தனர். 128 ரன்களை துரத்திய இந்திய அணி 15.5 ஓவர்களில் அதனை அடித்து அபார வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் திலக் வர்மா மற்றிம் அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 31 ரன்களும் எடுத்தனர்.
இந்த நிலையில்தான், இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முன்னாள் வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோரின் சாதனையை முறியடித்து மிரட்டி உள்ளார். அதாவது, நேற்றைய போட்டியில், தொடக்க வீராக களம் இறங்கிய அபிஷேக் சர்மா 13 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் என மொத்தம் 31 ரன்கள் அடித்தார்.
இதன் மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக பவர்பிளே ஓவர்களுக்குள் 30 ரன்களை விளாசிய முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்துள்ளார். முன்னதாக விராட் கோலி தொடக்க வீரராக களம் இறங்கி 29 ரன்கள் குவித்திருந்தார். அதேபோல் ரோகித் சர்மா 28 ரன்களை குவித்திருந்தார். இந்த இரண்டுமே 2022ஆம் ஆண்டு நிகழ்ந்தது. இந்த நிலையில், தற்போது விராட் கோலி, ரோகித் சர்மா ஆகிய இருவரையும் தாண்டி பவர்பிளே ஓவர்களுக்குள்ளேயே 30 ரன்கள் குவித்து அபிஷேக் சர்மா அசத்தி இருக்கிறார்.
About the Author
R Balaji