Asia Cup 2025: இந்தியா vs பாகிஸ்தான் மீண்டும் மோதல் – சூப்பர் 4 அட்டவணை இதோ!

Asia Cup 2025, Super 4 Probable Schedule: ஆசிய கோப்பை 2025 தொடர் கடந்த செப். 9ஆம் தேதி தொடங்கியது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வருகிறது.

Add Zee News as a Preferred Source

Asia Cup 2025: இந்தியா, பாகிஸ்தான், இலங்கை தகுதி

ஆசிய கோப்பை தொடரின் குரூப் சுற்று போட்டிகள் நாளையுடன் (செப். 19) நிறைவடைகிறது. பாகிஸ்தான் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் அணியை 41 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. இதனால், ஏ பிரிவில் எதிர்பார்த்தபடி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டன. பி பிரிவில் இலங்கை அணி சூப்பர் 4  சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டது. ஆப்கானிஸ்தான் அல்லது வங்கதேசம் அணிகளில் ஒன்று சூப்பர் 4 சுற்றுக்கு வரலாம்.

Asia Cup 2025: வங்கதேசமா? ஆப்கானிஸ்தானா? இன்று தெரியும்

குரூப் சுற்றில் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டும் மீதம் உள்ளன. அந்த வகையில், இன்று நடைபெறும் போட்டி முக்கியமான போட்டியாகும். ஆப்கானிஸ்தான் அணி வாழ்வா, சாவா என்ற கட்டத்தில் இலங்கை அணியுடன் இன்று அபுதாபியில் மோதுகிறது. ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றாலே போதுமானது, வங்கதேசம் தொடரை விட்டுவெளியேறிவிடும். வங்கதேசம் அனைத்து போட்டிகளையும் விளையாடிவிட்டது, ஆனாலும் ஆப்கானிஸ்தானை விட நெட் ரன்ரேட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது. எனவே, ஆப்கானிஸ்தான் இன்று வெற்றி பெற்றால் சூப்பர் 4 சுற்று உறுதியாகிவிடும். தோல்வியடையும்பட்சத்தில் வங்கதேசம் தகுதிபெறும்.

Asia Cup 2025: A1 இந்தியா, A2 பாகிஸ்தான்

இதன்படி சூப்பர் 4 சுற்றில் மூன்று அணிகள் உறுதியாகிவிட்டன. ஆனாலும் இரண்டு இடங்கள் மட்டும் தற்போது உறுதியாகி உள்ளது. புள்ளிப்பட்டியில் இந்தியா, பாகிஸ்தான் முறையே முதலிரண்டு இடங்களை பிடித்தன. அதாவது, A1 ஆக இந்தியா, A2 ஆக பாகிஸ்தான் ஆகும். இந்தியா நாளை ஓமன் நாட்டுக்கு எதிராக படுமோசமாக தோற்றாலும் நெட் ரன்ரேட் கில்லியாக (+4.793) இருக்கிறது. எனவே இது உறுதி.  

Asia Cup 2025: பி பிரிவு நிலவரம்

B1 பெரும்பாலும் இலங்கை அணியாக இருக்கும் என கூறினாலும், ஆப்கானிஸ்தான் இலங்கையைவிட நெட் ரன்ரேட்டில் அதிகம் உள்ளது. ஒருவேளை ஆப்கானிஸ்தான் இன்று வெற்றி பெற்றால் அந்த அணிதான் B1 ஆக வரும், இலங்கை B2 ஆக வரும், வங்கதேசம் வெளியேறும். தோல்வியடையும்பட்சத்தில் B1 ஆக இலங்கையும், B2 ஆக வங்கதேசமும் இருக்கும், ஆப்கானிஸ்தான் வெளியேறும். அந்த வகையில், இந்த சூழலில் சூப்பர் 4 அட்டவணை எப்படி இருக்கும் என்பதை இங்கே உத்தேசமாக காணலாம்.

Asia Cup 2025: சூப்பர் 4 உத்தேச அட்டவணை

செப். 20 (சனி) – ஆப்கானிஸ்தான்/இலங்கை (B1) vs இலங்கை/வங்கதேசம் (B2) – துபாய் 

செப். 21 (ஞாயிறு) – இந்தியா (A1) vs பாகிஸ்தான் (A2) – துபாய் 

செப். 23 (செவ்வாய்) – பாகிஸ்தான் (A2) vs ஆப்கானிஸ்தான்/இலங்கை (B1) – அபுதாபி

செப். 24 (புதன்) – இந்தியா (A1) vs இலங்கை/வங்கதேசம் (B2) – துபாய்

செப். 25 (வியாழன்) – பாகிஸ்தான் (A2) vs இலங்கை/வங்கதேசம் (B2) – துபாய்

செப். 26 (வெள்ளி) – இந்தியா (A1) vs ஆப்கானிஸ்தான்/இலங்கை (B1) – துபாய்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.