ஷென்சென்,
சீனா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள ஷென்சென் நகரில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ரங்கிரெட்டி- சிராக் ஷெட்டி இணை 24-22, 21-13 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஜூனைடி ஆரிப்- ராய் கிங் யாப் ஜோடியை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவின் முதல் சுற்றில் இந்தியாவின் துருவ் கபிலா-தனிஷா கிரஸ்டோ கூட்டணி 19-21, 13-21 என்ற நேர்செட்டில் சீனாவின் பெங் யான்-ஹூயாங் டோங் பிங் இணையிடம் பணிந்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ருதபர்னா பண்டா-ஸ்வேதாபர்னா பண்டா இணை 8-21, 13-21 என்ற நேர்செட்டில் மலேசியாவின் ஓங் சின் யீ-கார்மென் டிங் ஜோடியிடம் தோல்வியை தழுவியது.