ஆசிய கோப்பை தொடர் செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை 10 போட்டிகள் முடிவடைந்துள்ளது. நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்திய அணி இரண்டு போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் போட்டியில் யுஏஇ அணியையும் அதன் பின் பாகிஸ்தான் அணியுடனும் மோதியது. இரண்டு போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறி இருக்கிறது.
Add Zee News as a Preferred Source
இந்த சூழலில் நாளை (செப்டம்பர் 19) இந்திய அணி கடைசி லீக் ஆட்டமாக ஓமன் அணியை எதிர்கொள்ள இருக்கிறது. இந்த போட்டியில் இந்திய அணியின் முன்னணி பந்து வீச்சாளராக இருக்கும் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ஏனென்றால், பும்ரா தொடர்ந்து பேட்டிகளில் விளையாடினால் காயம் ஏற்படும் காரணமாக அவருக்கு சரியான முறையில் ஓய்வினை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பும்ராவின் பவுலிங் ஸ்டைல் காரணமாக அவருக்கு தோல்பட்டை பகுதியில் அடிக்கடி காயம் ஏற்படுகிறது. இதனால் சமீப காலமாகவே இந்திய அணி நிர்வாகம் பும்ராவை சரியான முறையில் ஓய்வு வழங்கி கையாண்டு வருகிறது. முன்னதாக இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பும்ராவை மூன்று போட்டிகளில் மட்டுமே இந்திய அணி அவரை பயன்படுத்தியது. மீதமுள்ள இரண்டு போட்டிகளில் அவருக்கு ஓய்வு அளித்தது.
இந்த நிலையில், ஓமனுக்கு எதிரான போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளித்து, அவரை பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி பும்ராவுக்கு ஓய்வளிக்கும் நிலையில், அவரது இடத்தை நிறப்ப அணிக்குள் அர்ஷ்தீப் சிங் வருவார். இதை தவிர்த்து இந்திய அணி வேறு ஏதும் மாற்றங்கள் நிகழ வாய்ப்பில்லை என தெரிகிறது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஜஸ்பிரித் பும்ரா பந்து வீச்சு பயிற்சியை தவிர்த்துள்ளார். அவர் வார்ம்-அப் உடற்பயிற்சிகளை மட்டும் தினமும் மேற்கொண்டு வருகிறார். மறுபுறம் அர்ஷ்தீப் சிங் முழுவீச்சில் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதன் மூலம் அர்ஷ்தீப் சிங் இந்திய அணிக்குள் வருவது உறுதியாகி உள்ளது.
இந்திய அணி: சுப்மன் கில், அபிஷேக் சர்மா, சூரியகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, சஞ்சு சாம்சன், அக்சர் படேல், ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா, குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங்.
ஓமன் அணி: ஜதீந்தர் சிங் (கேப்டன்), ஹம்மாத் மிர்சா, விநாயக் சுக்லா, சுஃப்யான் யூசுப், ஆஷிஷ் ஒடெடேரா, அமீர் கலீம், முகமது நதீம், சுஃப்யான் மெஹ்மூத், ஆர்யன் பிஷ்ட், கரண் சோனாவலே, ஜிக்ரியா இஸ்லாம், ஹஸ்னைன் அலி ஷா, பைசல் ஷா, முஹம்மது அலி ஷா, பைசல் ஷா, முஹம்மது கான், ஷகீல்வா இம்ரான்.
About the Author
R Balaji