அமெரிக்காவில் இந்திய இளைஞர் கொலை

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் சாண்டா கிளாரா பகு​தி​யில் இந்​திய இளைஞரை போலீ​ஸார் சுட்​டுக் கொன்​றனர். தெலங்​கானா மாநிலத்​தின் மஹபூப்​நகரை சேர்ந்​தவர் முகமது நிசா​முதீன் (32). கடந்த 2016-ம் ஆண்​டில் அவர் அமெரிக்கா​வுக்கு சென்​றார். அங்கு புளோரி​டா​வில் உயர் கல்வி பயின்​றார். பின்​னர் கலி​போர்​னியா மாகாணம், சாண்டா கிளாரா பகு​தி​யில் சாப்ட்​வேர் இன்​ஜினீய​ராக அவர் பணி​யாற்றி வந்​தார்.

அங்​குள்ள வாடகை வீட்​டில் முகமது நிசா​முதீனும் மற்​றொரு நபரும் தங்​கி​யிருந்​தனர். கடந்த 3-ம் தேதி இரு​வருக்​கும் இடையே மோதல் ஏற்​பட்​டது. அ்ப​போது நிசா​முதீன், சக நண்​பரை கத்​தி​யால் குத்​தி​ய​தாகக் கூறப்​படு​கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்​துக்கு சென்ற சாண்டா கிளாரா பகுதி போலீ​ஸார், முகமது நிசா​முதீனை துப்​பாக்​கி​யால் சுட்​டனர். இதில் அவரது உடலில் 4 குண்​டு​கள் பாய்ந்​தன. உடனடி​யாக அரு​கில் உள்ள மருத்​து​வ​மனை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார். அங்கு அவர் உயி​ரிழந்​தார்.

இதுகுறித்து நிசா​முதீனின் தந்தை ஹஸ்​னுதீன் கூறிய​தாவது: எனது மகன் நிசா​முதீனை எவ்​வித விசா​ரணை​யும் இன்றி போலீஸார் சுட்​டுக் கொலை செய்​துள்​ளனர். கடந்த இரு வாரங்​களாக அமெரிக்க போலீ​ஸார் எங்​களுக்கு எந்த தகவலை​யும் தெரிவிக்​க​வில்​லை. வெள்​ளிக்​கிழமை காலை​யில்​தான் மகன் உயி​ரிழந்​தது தெரிய​வந்​தது.

எனது மகனின் உடலை அமெரிக்​கா​வில் இருந்து இந்​தி​யா​வுக்கு கொண்டு வர மத்​திய வெளி​யுறவுத் துறை​யின் உதவியை நாடி உள்​ளேன். இவ்​வாறு ஹஸ்​னுதீன் தெரி​வித்​தார். இதுகுறித்து சாண்டா கிளாரா போலீ​ஸார் கூறும்​போது, “நி​சா​முதீன் தனது சக நண்​பரை கத்​தி​யால் கொடூர​மாக குத்​தி​னார். அவரை தடுத்து நிறுத்​தவே போலீஸ் அதி​காரி துப்​பாக்​கி​யால் சுட்​டார். போலீஸ் தரப்​பில்​ எந்​த தவறும்​ இல்லை” என்​று தெரிவித்​தனர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.