2025 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று செப்டம்பர் 21ம் தேதி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மோதுகின்றன. இந்த இரு அணிகளுக்கு இடையிலான பரபரப்பான போட்டிக்கு ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். காரணம் இந்தியா லீக் சுற்றில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், பாகிஸ்தானை மீண்டும் எதிர்கொள்கிறது. கடந்த போட்டியில் இந்திய அணியில் சில மாற்றங்கள் ஏற்பட்ட நிலையில், இந்த போட்டியிலும் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Add Zee News as a Preferred Source
இந்தியா மற்றும் பாகிஸ்தான்
இந்தியா கடந்த போட்டியில் ஓமானை வெற்றி பெற்று சூப்பர் 4-க்கு முன்னேறியது. அந்த போட்டியில் சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றதாக இருந்த துபாய் மைதானத்தில், நிறைய மாற்றங்களை செய்திருந்தது இந்தியா. ஆனாலும் ஓமன் சிறப்பாக விளையாடியதால் இந்தியா சிறிது தடுமாறியது. இருப்பினும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தனது முழு பலத்தை காட்டும் அணியையே இறக்கும். ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்கரவர்த்திக்கு கடந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியில் மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிளேயிங் லெவன் மாற்றங்கள்
ஓமன் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா, சக்கரவர்த்தி ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்ட நிலையில், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் விளையாடினர். இந்நிலையில் இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மற்றும் சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி மீண்டும் அணியில் இடம் பெறுகிறார்கள். இந்திய அணி மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் (அக்சர் படேல், குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி) மற்றும் ஒரு வேகப்பந்து வீச்சாளரான பும்ராவை மட்டும் அணியில் கொண்டுள்ளது. இதனால் அர்ஸ்தீப் சிங் அணியில் இடம் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வியும் எழுகிறது. கடந்த போட்டியில் இந்தியா பாகிஸ்தானுடன் கை கொடுக்க மறுத்த நிலையில், இன்றைய போட்டியில் என்ன நடக்கும் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இந்தியாவின் சமீபத்திய உத்தேச பிளேயிங் லெவன்
அபிஷேக் சர்மா, சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), திலக் வர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), . ஹர்திக் பாண்டியா, அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி
Gill, Abhishek & Varun- Only three players have chosen to come at ICC cricket academy for the optional practice session ahead of big game #INDvsPAK pic.twitter.com/aJR0xNpWxa
— Vimal imalwa) September 20, 2025
About the Author
RK Spark