ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, நேற்றைய தினம் போரிஜோர் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு நடைபெறும் திருவிழாவில் சிறுமி கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த ஒரு நபர் சிறுமியிடம் நன்றாக பேசி பழக்கம் ஏற்படுத்திக் கொண்டார்.
பின்னர் அந்த நபர் சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தனியாக அழைத்துச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே அந்த நபரின் 3 நண்பர்கள் காத்திருந்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
ஒருவழியாக அங்கிருந்து தப்பி வந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து இது குறித்து சிறுமியின் குடும்பத்தினர் போலீசாரிடம் அளித்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 4 குற்றவாளிகளை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.