கேரளாவில் விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

திருவனந்தபுரம்,

இன்றைய அவசர உலகில் குடும்ப வாழ்க்கையில் இருக்கும் இளம் தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலும், விட்டு கொடுத்து வாழத் தெரியாமலும், சிறிய விஷயங்களுக்கு எல்லாம் கோபப்பட்டு, சண்டை போட்டுக் கொண்டு விவாகரத்து வாங்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிலும் குறிப்பாக 30 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகம் இந்த முடிவை எடுக்கின்றனர். சாதி, மதம், இனம் என்று வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினரும் விவாகரத்தை தேடிச்செல்கின்றனர். சகிப்பு தன்மையும், புரிதலும் இல்லாததே இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்தநிலையில், கேரளாவில் திருமணம் செய்த குறுகிய காலத்திலேயே சட்டப்பூர்வ விவாகரத்து கோருவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாக புள்ளி விபரங்கள் வெளியாகியுள்ளன. ஆண்டுக்கு சுமார் 1.10 லட்சம் திருமணங்கள் பதிவாகும் நிலையில், சுமார் 30,000 விவாகரத்து வழக்குகள் பதிவாகின்றன. இதில் கணிசமானோர், முந்தைய ஆண்டில் திருமணம் செய்தவர்கள் என ஆர்.டி.ஐ மூலம் பெறப்பட்ட தகவலில் தெரியவந்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.