சென்னை; சென்னையை அடுத்த செங்கல்பட்டில், ரூ.130 கோடி மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலையம் டிசம்பரில் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, பணிகள் 75 சதவிகிதம் அளவுக்கு முடிவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகள் முடிவடைந்து இந்த ஆண்டு இறுதியில் திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் புறநகர் மாவட்டங்களில் ஒன்று செங்கல்பட்டு மாவட்டம். மாவட்டத்தின் தலைநகரான செங்கல்பட்டில் நகர் பகுதியில் அமைந்துள்ள பேருந்து நிலையம் இட நெருக்கடியால் சிக்கி தவித்து […]
