புதுடெல்லி,
உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் புதுடெல்லியில் நடந்து வருகின்றன. இதில், உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு முதல் தங்க பதக்கம் கிடைத்துள்ளது.
இதில், இந்திய பாரா தடக வீரரான சைலேஷ் குமார் இந்தியாவுக்கான முதல் தங்க பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். அவர் 1.91 மீட்டர் உயரம் தாண்டி தங்கம் வென்றது மட்டுமின்றி, சாம்பியன்ஷிப்பில் சாதனையும் படைத்துள்ளார்.
அமெரிக்காவின் எஜ்ரா பிரெக் (1.85 மீட்டர்) வெள்ளி பதக்கமும் மற்றும் இந்தியாவின் வருண் சிங் பாட்டி (1.85 மீட்டர்) வெண்கல பதக்கமும் வென்றார்.
Related Tags :