சென்னை: காலாண்டு விடுமுறை மற்றும் ஆயுத பூஜை தொடர் விடுமுறையையொட்டி, வெளியூர் செல்பவர்களால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், வாகன ஓட்டிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி நாளை பல பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. செப்டம்பர் 30 அன்று, ஆயுத பூஜை விடுமுறைக்காக மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதனால், சாலைகளில் அதிக வாகனங்கள் செல்லும். இதை சமாளிக்க, கனரக வாகனங்களுக்கு சில முக்கிய இடங்களில் வழித்தட மாற்றம் […]
