டெல்லி என்சிஆர் பகுதிகளில் பசுமை பட்டாசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி

புதுடெல்லி: பேரி​யம் நைட்​ரேட் போன்ற வேதிப்​பொருட்​கள் பட்​டாசு தயாரிப்​பில் பயன்​படுத்​து​வ​தால் உடல் நலனுக்​கும், சுற்​றுச்​சூழலுக்​கும் கேடு ஏற்​படு​வ​தாகத் தெரி​வித்து அவற்​றைத் தடை செய்​யக் கோரி அர்​ஜுன் கோபால் உள்​ளிட்​டோர் உச்ச நீதி​மன்​றத்​தில் பொதுநல மனுக்​களை தாக்​கல் செய்​தனர். இந்த மனுக்​களை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பசுமை பட்​டாசுகளை மட்​டுமே தயாரிக்க வேண்​டும் என தீர்ப்பு வழங்​கியது.

இதனிடையே பட்​டாசு வெடிப்​ப​தற்​குத் தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் தாக்​கல் செய்த மற்​றொரு மனுவை விசா​ரித்த உச்ச நீதி​மன்​றம், பட்​டாசு விற்​பனைக்​கும், வெடிப்​ப​தற்​கும் தேசிய தலைநகரப்​ பகு​தி​களில்​(என்​சிஆர்) கடந்த 2024-ம் ஆண்டு தடை விதித்​தது. இதனால் பட்​டாசு தொழிலை மட்​டுமே நம்​பி​யுள்ள லட்​சக்​கணக்​கான மக்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறி பட்​டாசு தயாரிப்பு நிறு​வனங்​கள் தாக்​கல் செய்த மனுவை உச்ச நீதி​மன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமயி​லான அமர்வு நேற்று மீண்​டும் விசா​ரித்​தது.

பட்​டாசு தயாரிப்​பாளர்​கள் தரப்​பில் மூத்த வழக்​கறிஞர்​கள் கே. பரமேஷ்வர், பல்​வீர் சிங் ஆகியோர் ஆஜராகி, டெல்லி என்​சிஆர் பகு​தி​களில் பட்​டாசுக்கு விதிக்​கப்​பட்ட தடை​யால் பட்​டாசு தொழிலை நம்​பி​யுள்​ளவர்​கள் பாதிக்​கப்​பட்​டுள்​ளனர். எனவே, பட்​டாசு தயாரிப்​புக்கு அனு​ம​திக்க வேண்​டும். அர்​ஜுன் கோபால் வழக்​கில் விதித்த நிபந்​தனை​களைப் பின்​பற்​றிப் பசுமை பட்​டாசுகளைத் தயாரிக்க அனு​ம​திக்க வேண்​டும் என்று வாதிட்​டனர்.

மத்​திய அரசு சார்​பில் ஆஜரான கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் ஐஸ்​வர்யா பட்​டி, பட்​டாசு வெடிக்க நாடு முழு​வதும் தடை விதிக்​கு​மாறு மத்​திய அரசு ஆலோ​சனை தெரிவிக்​க​வில்​லை. இதைச் மத்​திய அரசு தாக்​கல் செய்​துள்ள பிர​மாணப் பத்​திரத்​தில் காண முடி​யும் என வாதிட்​டார்.

இந்த வழக்​கில் உச்ச நீதி​மன்​றத்​துக்கு உதவுவதற்​காக நியமிக்​கப்​பட்ட வழக்​கறிஞர் அப்​ராஜிதா சிங், இதற்கு ஆட்​சேபம் தெரி​வித்​துடன், பட்​டாசு வெடிக்க விதிக்​கப்​பட்ட தடையைத் தளர்த்​தக்​கூ​டாது. தடை விதித்​திருக்​கும்​போதே, தடை​யில்​லாத நிலை போல உள்​ளது. தடையைத் தளர்த்​தி​னால் கட்​ட​விழ்த்து விட்​ட​தாகி​விடும் என்று வாதிட்​டார்.

வழக்​கறிஞரின் வாதங்​களுக்​குப் பிறகு தலைமை நீதிபதி கூறும்​ போது, “தடையை மீறி பட்​டாசுகளை விற்​போரின் உரிமங்​களை உடனடி​யாக ரத்​து செய்ய வேண்​டும். இந்த விவ​காரத்​தில் அனை​வரும் ஏற்​கும்​படி​யான தீர்வை எட்ட உரிய​வர்​களு​டன் மத்​திய ஆலோ​சனை நடத்தி தகவல் தெரிவிக்க வேண்​டும்.

அது​வரை டெல்லி என்​சிஆர் பகு​தி​களில் பசுமை பட்​டாசுகளைத் தயாரிக்க அனு​ம​திக்​கப்​படு​கிறது. ஆ​னால்​ மறு உத்​தரவு பிறப்​பிக்​கும்​ வரை​விற்​பனை செய்​யக்​ கூ​டாது” என்​று உத்​த​ரவிட்​​டார்​. வழக்​கின்​ வி​சா​ரணை அக்​டோபர்​ 8-ம்​ தேதிக்​கு ​ தள்​ளிவைக்கப்பட்டது​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.