மாநில அந்தஸ்து கோரி லடாக்கில் போராட்டம்: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் கைது

லே: லடாக் பகு​திக்கு மாநில அந்​தஸ்து வழங்​கக் கோரி​யும், அரசி​யலமைப்பு சட்​டத்​தின் 6-வது அட்​ட​வணை​யில் லடாக்கை சேர்க்க வலி​யுறுத்​தி​யும் சமூக ஆர்​வலரும், கல்​வி​யாள​ரு​மான சோனம் வாங்​சுக் கடந்த 2 வாரங்​களாக உண்​ணா​விரதம் மேற்​கொண்டு வந்தார். வேறு சில அமைப்​பு​களும் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்​தன.

லடாக் யூனியன் பிரதேசத்​துக்கு மாநில அந்​தஸ்து கோரி தலைநகர் லேயில் அங்​குள்ள லே உச்ச அமைப்பு (எல்​ஏபி) சார்​பில் நடத்​தப்​பட்ட போராட்​டம் கடந்த புதன்​கிழமையன்று வன்​முறை​யாக மாறியது. போராட்​டத்​தைக் கட்​டுப்​படுத்த முயன்ற பாது​காப்​புப் படை​யினர் நடத்​திய துப்​பாக்​கிச்​சூட்​டில் 4 பேர் உயி​ரிழந்​தனர்.

இந்​நிலை​யில் நேற்​று, சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக்கை லடாக் போலீ​ஸார் கைது செய்​துள்​ளனர். சோனம் வாங்​சுக்​குக்கு சொந்​த​மான இமாலயன் இன்​ஸ்​டிடியூட் ஆப் ஆல்​டர்​நேட்​டிவ்ஸ் லடாக்​(எச்​ஐஏஎல்) என்ற பெயரிலான இன்​ஸ்​டிடியூட்​டுக்கு வெளி ​நாடு​களில் இருந்து ரூ.1.5 கோடி நிதி முறை​கே​டான வழி​யில் வந்​துள்​ள​தாக​வும் மத்​திய உள்​துறை அமைச்​சகம் புகார் தெரி​வித்​துள்​ளது. மேலும், சோனம் பாகிஸ்தான் சென்று வந்தது குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இன்டர்​நெட் சேவை ரத்து: சமூக ஆர்​வலர் சோனம் வாங்​சுக்​கின் கைதைத் தொடர்ந்து லடாக் பகு​தி​யில் இன்​டர்​நெட் சேவை ரத்து செய்​யப்​பட்​டது. சோனம் வாங்சுக்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.