தூத்துக்குடி: பிரபலமான குலசை தசரா திருவிழாவின் சூரசம்ஹாரம் இன்று இரவு குலசை கடற்கரையில் கோலாகலமாக நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்து வருகின்றனர். இதையொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா செப்டம்பர் 23 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10ஆம் நாளான இன்று இரவு (அக்டோபர் 2ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு பல லட்சக்கண்கானவர்கள் குவிந்து வருவதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. […]
