டெல்லி: இந்தியா சீனா இடையே கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட விமான சேவை மீண்டும் தொடங்க உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே நட்புறவு துளிர்த்துள்ள நிலையில், அக்டோபர் 26ந்தேதி முதல் இந்தியா – சீனா இடையே 5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படுகிறது. இதை இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனமான இண்டிகோ, அக்டோபர் 26, 2025 முதல் கொல்கத்தாவிலிருந்து குவாங்சோவிற்கு தினசரி நேரடி விமானங்களைத் தொடங்கும் என்றும், டெல்லி வழித்தடத்தில் […]
