சென்னை: பருவமழை காலத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டுப் பணிகள் அமைச்சர்கள் கேஎன் நேரு, மா.சுப்பிரமணியன் தாலைமையில், பருவமழை தொற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மருத்துவத்துறை, நகராட்சி நிர்வாகத்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் முக்கிய சேவைத்துறை அலுவலர்களுடன் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன்; பருவமழை காலங்களில் […]
