சீனாவுடனான வர்த்தக உறவை வலுப்படுத்துவது அவசியம்: நிதி ஆயோக் சிஇஓ சுப்ரமணியம் கருத்து 

புதுடெல்லி: சீனா உள்​ளிட்ட அண்டை நாடு​களு​டன் இந்​தியா வலு​வான வர்த்தக உறவு​களை கொண்​டிருப்​பது அவசி​யம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதி​காரி (சிஇஓ) பிவிஆர் சுப்​ரமணி​யம் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறிய​தாவது: ஜிஎஸ்டி 2.0-க்​குப் பிறகு தீபாவளிக்கு முன் மற்​றொரு முக்​கிய சீர்​திருத்​தம் அறிவிக்​கப்பட வாய்ப்​புள்​ளது. நிதி ஆயோக் உறுப்​பினர் ராஜீவ்கவுபா தலை​மையி​லான குழு ஏற்​கெனவே இந்த சீர்​திருத்​தங்​கள் குறித்த முதல் அறிக்​கைகளை சமர்​பித்​துள்​ளது.

முழு ஐரோப்​பிய ஒன்​றிய​மும் 50 சதவீத வர்த்​தகத்தை தங்​களுக்​குள்​ளாகவே செய்து கொள்​கிறது. வங்​கதேசம் இந்​தி​யா​வின் 6-வது பெரிய வர்த்தகபங்​கு​தா​ரர். நேபாளம் முன்பு முதல் 10 இடங்​களுக்​குள்​ளாக இருந்​தது. அண்டை நாடு​களு​டன் வர்த்​தகத்தை அதி​கரிக்க வேண்​டியது மிக அவசி​ய​ம். சீனா உள்​ளிட்ட அண்டை நாடு​களு​டன் நமது வர்த்​தகத்தை வலுப்​படுத்த வேண்​டும். 18 டிரில்​லியன் டாலர் கொண்ட சீனப் பொருளா​தா​ரத்தை நாம் அவ்​வளவு எளி​தில் புறக்​கணித்​து​விட முடி​யாது, தவிர்க்க கூடாது.

சீனா​வுக்கு முக்​கிய சப்​ளை​ய​ராக இந்​தியா உள்​ளது. சிறந்த நாடு​கள் சீனாவுடன் நல்ல அளவில் வர்த்தக உபரியைக் கொண்​டுள்​ளன. எனவே, நாம் அவற்​றுடன் போட்​டி​யிட்டு நல்ல பொருட்​களை சீனா​வுக்கு விற்​பனை செய்ய இயலும். இவ்​வாறு சுப்​ரமணி​யம்​ தெரி​வித்​தா​ர்​.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.