ஜப்பான், பிரிட்டன், ஜோர்டானை சேர்ந்த 3 விஞ்ஞானிகளுக்கு வேதியியல் நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம்: சுசுமு கிடகாவா, ரிச்சர்டு ராப்சன், ஒமர் எம் யாகி ஆகிய 3 விஞ்​ஞானிகளுக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. உலோக கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்கு பங்காற்றியதற்காக இந்த விருது கூட்டாக வழங்கப்பட உள்ளது.

ஜப்பானின் கியோடோ நகரைச் சேர்ந்த சுசுமு கிடகாவா, பிரிட்டனின் க்ளஸ்பர்ன் நகரைச் சேர்ந்த ரிச்சர்டு ராப்சன், ஜோர்டானின் அம்மான் நகரைச் சேர்ந்த ஒமர் எம் யாகி ஆகிய மூவருக்கும் வேதியியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைப்​போருக்கு ஆண்​டு​தோறும் நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. மருத்​துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன்​தினம் அறிவிக்​கப்​பட்​டது. அமெரிக்​காவைச் சேர்ந்த மேரி இ பிரன்​கோவ், ஃப்​ரெட் ராம்​ஸ்​டெல் மற்​றும் ஜப்​பானைச் சேர்ந்த ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு இந்த விருது பகிர்ந்​தளிக்​கப்​படு​ம் என அறிவிக்​கப்​பட்​டளது.

இதைத் தொடர்ந்து இயற்​பியலுக்​கான நோபல் பரிசு விவரங்​கள் நேற்று வெளி​யிடப்பட்டன. அமெரிக்​காவைச் சேர்ந்த ஜான் எம். மார்​டினிஸ், பிரிட்​டனை சேர்ந்த ஜான் கிளார்க், பிரான்ஸை சேர்ந்த மைக்​கேல் டெவோரெட் ஆகியோர் இயற்​பியலுக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்​யப்​பட்டனர்.

இந்நிலையில், வேதியியலுக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்துக்கான நோபல் பரிசு நாளையும், அமைதிக்கான நோபல் பரிசு அக்.10-ம் தேதியும், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அக்.13-ம் தேதியும் அறிவிக்கப்பட உள்ளது.

இவ்விருது அறிவிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் தங்க பதக்கம், பட்டயம், ரொக்கப் பரிசு 11 மில்லியன் ஸ்வீடிஷ் குரோனர் (தோராயமாக இந்திய மதிப்பில் ரூ.1.03 கோடி) உள்ளிட்டவை ஆல்பிரட் நோபல் நினைவு நாளான டிசம்பர் 10-ல் வழங்கப்படும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.