இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் விரைவில் தொடங்க உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இந்த தொடரில் இந்திய அணிக்காக விளையாட உள்ளனர். இந்நிலையில் ரோகித் ஷர்மா மற்றும் விராட் கோலி இருவரும் இந்த தொடருக்கு பிறகு சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம், இந்திய அணி கட்டமைப்பில் சமீபத்தில் ஏற்பட்ட பெரிய மாற்றத்தின் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்திய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மனோஜ் திவாரி, இருவரின் எதிர்காலம் குறித்து அவரது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
Add Zee News as a Preferred Source
அணியின் தலைமை மாற்றம்!
ஆஸ்திரேலியா தொடரில் இந்திய அணியின் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் ஷர்மாவை நீக்கி, இளம் வீரர் ஷுப்மன் கில்க்கு பிசிசிஐ வாய்ப்பு அளித்துள்ளது. இதன் மூலம் விராட் மற்றும் ரோஹித் இருவரும் ஒருநாள் போட்டிகளில் கில்லின் தலைமையில் விளையாட போகிறார்கள். பிசிசிஐ தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் இது தொடர்பான அறிவிப்பில், 2027 உலக கோப்பை போட்டியில் ரோகித் மற்றும் கோலியின் பங்கு குறித்து தெளிவில்லாத நிலை உள்ளது எனவும்கூறினார்.
மனோஜ் திவாரியின் விமர்சனங்கள்
சமீபத்தில் பேசிய பேட்டியில் மனோஜ் திவாரி, “விராட் கோலி, ரோகித் ஷர்மா இந்திய கிரிக்கெட்டுக்காக செய்த பங்களிப்பை கருத்தில் கொள்ளாமல், இப்போது அவர்களுக்கு வழங்கப்படும் நிலை மிகவும் அவமரியாதையானது. எனது நம்பிக்கை, இருவரும் ஆஸ்திரேலியா தொடருக்கு பிறகு ஓய்வை அறிவிக்கலாம். வெற்றிகரமான கேப்டனாக இருந்த ரோகித்து ஏன் மாற்றப்படணும்,” என விமர்சித்துள்ளார்.
எதிர்கால கேள்விகள்
ரோஹித் சர்மா இந்திய அணியின் ஒருநாள் போட்டி கேப்டனாக 56 போட்டிகளில் 42 வெற்றிகளை பெற்றுள்ளார். சமீபத்தில் UAEல் நடந்த Champions Trophyயில் இந்திய அணிக்கு கோப்பை வாங்கி கொடுத்துள்ளார். இந்த இரு நட்சத்திர வீரர்களும் 2027 உலக கோப்பில் விளையாடுவார்கள் என எதிர்பார்ப்பு இருந்த நிலையில், ஆஸ்திரேலியா தொடரில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
இந்திய அணி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ஷுப்மான் கில், ரோகித் சர்மா, விராட் கோலி, துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர், அக்சர் படேல், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல், நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, விக்கெட் கீப்பர் துருவ் ஜூரல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
போட்டி விவரம்
அக்டோபர் 19 (ஞாயிறு): முதல் ஒருநாள் போட்டி – பெர்த் மைதானம், பெர்த்
அக்டோபர் 23 (வியாழக்கிழமை): 2வது ஒருநாள் போட்டி – அடிலெய்டு ஓவல், அடிலெய்டு
அக்டோபர் 25 (சனிக்கிழமை): 3வது ஒருநாள் போட்டி – சிட்னி கிரிக்கெட் மைதானம், சிட்னி
About the Author
RK Spark