சிறந்த சின்னத்திரைக் கலைஞர்களைக் கெளரவிக்கும் 2024-ம் ஆண்டுக்கான விகடன் சின்னத்திரை விருதுகள் விழா இன்று நடைபெற்று வருகிறது.
இதில் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதற்காக நடிகர் விஜய் சேதுபதிக்கு 2024-ம் ஆண்டுக்கான ‘Television Talk of the Year’ விருது வழங்கப்பட்டது. இவ்விருதை நடிகை ராதிகா வழங்கினார்.

விருது விழா மேடையில் பேசிய விஜய் சேதுபதி, “இதுக்கு முன்னாடி ‘மாஸ்டர் செஃப்’, ‘நம்ம ஊரு ஹீரோ’ பண்ணேன். இப்போ ‘பிக் பாஸ்’ பண்ணிக்கிட்டிருக்கேன். எனக்கு ஹோஸ்ட் பண்ண ரொம்ப பிடிச்சிருக்கு.
`பிக் பாஸ்’ நிகழ்ச்சியை மட்டும் கொஞ்சம் கவனமாகக் கையாளணும். `பிக் பாஸ்’ நிகழ்ச்சியை நானும் நல்லா பார்த்துடுவேன், `பிக் பாஸ்’ டீமும் பார்த்துடுவாங்க. எல்லாரும் கலந்து பேசி, ரொம்ப கவனமா பண்ண வேண்டியிருக்கு.
கொஞ்சம் மிஸ்ஸானாலும் `பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளேயும் அடிப்பாங்க, வெளியவும் அடிப்பாங்க. எல்லாத்தையும் கவனத்துல வெச்சு பண்ண வேண்டியிருக்கு” என்று பேசியிருக்கிறார்.
தன் படங்கள் பற்றிப் பேசியவர், “என் படத்த எனக்கே பார்க்க கூச்சமாக இருக்கும். டப்பிங்கில் பார்ப்பதோடு சரி, என் படத்த நான் இன்னும் முழுசா பார்த்ததில்லை. என் படத்த பார்க்க தியேட்டர்க்குப் போனகூட படத்த பார்க்காம ஆடியன்ஸதான் பார்ப்பேன் ’’ என்றார்.