சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காஸா தீர்மானம் உள்பட பல முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று (அக்.14)ந்தேதி தொடங்கியது. நேற்றைய நிகழ்ச்சில், சபையை தொடங்கியதும் சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின. தொடர்ந்து மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன. […]
