மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘பைசன்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன், அமீர், பசுபதி எனப் பலரும் நடித்திருக்கும் இப்படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்திருக்கிறார்.
அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு, மாரி செல்வராஜின் சொந்த அனுபவங்களோடு பின்னப்பட்டு உருவாகியிருக்கிறது ‘பைசன்’.

இன்று திரையரங்கில் ரசிகர்களுடன் படம் பார்த்த இயக்குநர் மாரி செல்வராஜ், “ரொம்ப நாளாக எனக்குள் அழுத்திக்கிட்டு இருந்த விஷயத்தை, எப்படியாவது சொல்லியாக வேண்டும் என்று திரைப்படமாக எடுத்திருக்கிறேன். அதை முழுமையாக ஏற்றுக் கொண்ட பார்வையாளர்களுக்கு நன்றி.
அதுதான் படத்தின் மிகப்பெரிய வெற்றியாகப் பார்க்கிறேன். இந்தப் படத்திற்காக நிறைய உழைத்திருக்கிறோம். எங்களுடைய கடுமையான உழைப்பிற்குக் கிடைத்த வெற்றி இது” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.