மெல்போர்ன்,
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த தொடர் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் முதலில் ஒருநாள் போட்டிகளும், அதனை தொடர்ந்து டி20 போட்டிகளும் நடக்கின்றன. ஒருநாள் தொடரின் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி இடம் பெற்றுள்ளனர்.7 மாதங்களுக்கு பிறகு இருவரும் களம் காணுவதால் இந்த தொடருக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி சுப்மன் கில்லுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டது ஏன்? சுப்மன் கில் எதற்காக கேப்டனாக அறிவிக்கப்பட்டார் என்பது குறித்து ரோகித் சர்மாவிடம் தலைமை பயிற்சியாளர் கம்பீர் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. மேலும் அணியில் ரோகித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து கம்பீர் விவரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அனுபவம் வாய்ந்த ரோகித் சர்மா, கோலியின் பங்களிப்பு இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணிக்கு மிகவும் முக்கியம் என்றும் இதனால் எந்த ஒரு சுமையும் இன்றி சுதந்திரமாக விளையாடும்படியும் ரோகித் சர்மாவிடம் காம்பீர் தெரிவித்துள்ளார்