சபரிமலை தங்க திருட்டு வழக்கு: தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் கைது

திருவனந்தபுரம்: சபரிமலை​யில் தங்​கம் திருடு​போன விவ​காரத்​தில் முக்​கிய குற்​ற​வாளி​யாக கருதப்​படும் பெங்​களூரு​வைச் சேர்ந்த தொழில​திபர் உன்​னிகிருஷ்ணன் கைது செய்​யப்பட்டார்.

சபரிமலை கோயி​லில் உள்ள துவார​பால​கர் சிலை​யில் இருந்த தங்​கம் திருடு போனது தொடர்​பாக கேரள உயர்​நீ​தி​மன்​றம் அமைத்த எஸ்​ஐடி குழு தீவிர விசா​ரணை நடத்தி வரு​கிறது.

எஸ்​ஐடி-யைப் பொறுத்​தவரை​யில் இரண்டு வழக்​கு​களை விசா​ரித்து வரு​கிறது. ஒன்​று, துவார​பால​கர் சிலைகளில் இருந்த தங்​கம் மாய​மானது தொடர்​பானது. மற்​றொன்று கோ​வில் கதவில் இருந்த சட்​டங்​களில் இந்த தங்​கம் காணா​மல் போனது தொடர்​பானது.

இந்த நிலை​யில்​தான், பெங்​களூரு​வைச் சேர்ந்த தொழில​திபர் உன்​னிகிருஷ்ணனை எஸ்​ஐடி கைது செய்து பல மணி நேரம் விசா​ரணை மேற்​கொண்​டது. நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தப்​படும் வரை உன்​னிகிருஷ்ணனை சிறப்பு விசா​ரணைக் காவலில் வைக்​கப்​படு​வார் என்று தெரி​கிறது.

சபரிமலை மேற்​பார்​வை​யின் கீழ் அமைக்​கப்​பட்ட எஸ்​ஐடி இந்த வழக்கை கையில் எடுத்த 5-வது நாளில் இந்த கைது நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது. கடந்த 2019-ம் ஆண்டு தங்​கத் தகடு​கள், உன்னிகிருஷ்ணனிடம் ஒப்​படைக்​கப்​பட்​ட​போது அவற்​றின் எடை சுமார் நான்கு கிலோ வரை குறைந்​ததை விசா​ரணை​யின்​போது உயர் நீதி​மன்ற அமர்வு சுட்​டிக்​காட்​டியது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.