சென்னை: தீபாவளியன்று (திங்கட்கிழமை) ஞாயிறு அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்படும் என சென்னை கோட்டம் ரயில்வே அறிவித்து உள்ளது. நாடு முழுவதும் வரும் 21ந்தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, அன்றைய தினமும், அடுத்த நாளும் தமிழ்நாட்டில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், 21ந்தேதேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகைக்கு விடுமுறை என்பதால் சென்னையில் அன்று ஞாயிறு கால அட்டவணைப்படி மின்சார ரெயில்கள் இயக்கப்பட உள்ளன. இதுகுறித்து சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையில், […]
