புதுடெல்லி: நாட்டின் பல பகுதிகளில் டிஜிட்டல் கைது முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
போலியான நீதிமன்ற ஆவணங்களைக் காட்டி டிஜிட்டல் கைது முறைகேடுகள் நடப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், ஜோய்மால்யா பக்சி அடங்கிய அமர்வு நேற்று தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரித்தது.
டிஜிட்டல் கைது முறைகேடுகள் மிகவும் கவலை தரும் விஷயம் என்று குறிப்பிட்டுள்ள நீதிபதிகள், இந்த விவகாரத்தில் மத்திய அரசு, சிபிஐ பதில் அளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.