மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் விரைவில் 39 பல் மருத்துவ உதவியாளர்கள் நியமனம்

சென்னை: தமிழ்​நாடு மருத்​துவ சார்​நிலைப் பணி​யின் கீழ் வரும் பல் மருத்​துவ உதவி​யாளர் பதவி​யில் 39 காலி பணி​யிடங்​களை நேரடி நியமன முறை​யில் நிரப்​ப ஆன்​லைன் வாயி​லாக விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன. பிளஸ் 2 (அறி​வியல் பாடங்​கள்) முடித்​து​விட்டு பல் மருத்​து​வத்​தில் டிப்​ளமா படிப்பு படித்​தவர்​கள் இதற்கு விண்​ணப்​பிக்​கலாம். தமிழ்​நாடு பல் மருத்​துவ கவுன்​சிலில் பதிவுசெய்​திருக்க வேண்​டியது அவசி​யம்.

தகு​தி​யுடைய நபர்​கள் மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்தை (www.mrb.tn.gov.in) பயன்​படுத்தி நவம்​பர் மாதம் 2-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

மொத்த காலி பணி​யிடங்​களில் தமிழ் வழி​யில் படித்​தவர்​களுக்கு 20 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதற்கு 1-ம் வகுப்பு முதல் நிர்​ண​யிக்​கப்​பட்ட கல்​வித் தகு​தி​யான பல்​மருத்​துவ டிப்​ளமா படிப்பு வரை தமிழ் வழி​யில் படித்​திருக்க வேண்​டும் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.