பிஹாரில் மாணவர் பிரசாந்த் கிஷோர் கட்சி சார்பில் பிரபல கணித பேராசிரியர் கே.சி.சின்ஹா தேர்தலில் போட்டி

பாட்னா: பிஹார் சட்​டப்​பேர​வைக்கு வரும் நவம்​பர் 6, 11 ஆகிய தேதி​களில் 2 கட்​டங்​களாக தேர்​தல் நடை​பெற உள்​ளது. இதில் புகழ்​பெற்ற கணிதப் பேராசிரியர் கே.சி. சின்ஹா (70) பிர​சாந்த் கிஷோர் தலை​மையி​லான ஜன் சுராஜ் கட்​சி​யின் சார்​பில் போட்​டி​யிடு​கிறார். அவர் பாட்​னா​வின் கும்​ராஹர் தொகு​தி​யில் சமீபத்​தில் வேட்பு மனு தாக்​கல் செய்​தார்.

புகழ்​பெற்ற கணிதப் பேராசிரிய​ரான சின்​ஹா, அல்​ஜீப்​ரா, கால்​குலஸ், டிரிக்​னாமெட்​ரி, வெக்​டர் ஜியோமெட்ரி உட்பட 70-க்​கும் மேற்​பட்ட கணித நூல்​களை எழுதி உள்​ளார். பிஹார் மாநிலம் கைமுர் மாவட்​டம் பேயுர் கிராமத்​தில் பிறந்த சின்​ஹா, சிறு வயதிலிருந்தே படிப்​பில் சிறந்து விளங்​கி​னார். பள்​ளிப்​படிப்​பில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த அவர், பல்​கலைக்​கழக அளவிலும் முதலிடம் பிடித்​தார்.

குடிமைப் பணி தேர்​வில் சில மதிப்​பெண்​கள் குறை​வாக பெற்று தோல்வி அடைந்​தார். பின்​னர் கல்​லூரி கணித ஆசிரியர் பணி​யில் தன்னை ஈடு​படுத்​திக் கொண்ட அவர், பாட்னா பல்​கலைக்​கழகத்​தில் இணைந்​தார். அங்கு ரீடர், பேராசிரியர், துறைத் தலை​வர், டீன் என படிப்​படி​யாக உயர்ந்​தார்.

பின்​னர் நாளந்தா திறந்​தநிலை பல்​கலைக்​கழகத்​தின் துணை வேந்​த​ராக பொறுப்​பேற்​றார். 2021 முதல் 2024 வரை மேலும் 4 பல்​கலைக்​கழகங்​களின் துணை வேந்​த​ராக​வும் கூடு​தல் பொறுப்பு வகித்​துள்​ளார். இவரது பதவிக் காலத்​தில் பல்​வேறு சீர்​திருத்​தங்​களை மேற்​கொண்​டார்.

இந்​நிலை​யில், தனது மாணவ​ரான பிர​சாந்த் கிஷோரின் வேண்​டு​கோளை ஏற்​று, கடந்த ஆண்டு அவருடைய ஜன் சுராஜ் கட்​சி​யில் சின்ஹா இணைந்​தார்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.