உஜ்ஜைன் மகாகாலேஷ்வர் கோயிலில் தலைப்பாகை அணிவதில் பூசாரிகள் மோதல்

புதுடெல்லி: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா காலேஷ்வர் கோயில் உள்​ளது. இங்கு நேற்​று ​முன்தினம் காலை தலைப்​பாகை அணிவ​தில் 2 பூசா​ரி​களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்​டது. இதுகுறித்து கோயில் நிர்​வாகம் விசா​ரணை​யைத் தொடங்​கி​யுள்​ளது.

சம்​பவத்​தில் ரிம்​முக்​தேஷ்வர் கோயில் தலை​வர் மகாவீர் நாத், தனது சக துறவி சங்​கர் நாத்​துடன் பூஜை செய்ய கரு​வறைக்கு வந்​தார். அப்​போது மகாவீர் நாத் பாரம்​பரிய தலைப்​பாகை அணிந்​திருந்​தார். அதைப் பார்த்த அங்​கிருந்த பூசாரி மகேஷ் சர்​மா, தலைப்​பாகையை அகற்​றும்​படி தெரி​வித்​தார். மகா​காலேஷ்வருக்கு முன்பு தலைப்​பாகை அணிவது கோயில் மரபுக்கு எதி​ரானது என்று கூறி​னார். இதற்கு மகாவீர் நாத் மறுத்​த​தால் இரு​வருக்​கும் இடையே கடும் வாக்​கு​வாதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், பூசாரி மகேஷ் சர்மா தனது தலைப்​பாகையை வலுக்​கட்​டாய​மாக அகற்ற முயன்​ற​தாக​வும், சக துற​வியைத் தள்​ளி​விட்​ட​தாக​வும் மகாவீர் நாத் குற்​றம் சாட்​டி​னார். அதற்​கு, பூசாரி மகேஷ் சர்மா தன்னை தாக்க வந்​தமை​யால் தற்​காப்​புக்​காக இதை செய்​த​தாகப் பதிலளித்​துள்​ளார்.

இதுகுறித்து துறவி​கள் சிலர் ஆசிரமத்​தில் கூடி, பூசாரி மகேஷ் சர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்​கக் கோரினர். பர்த்​ரிஹரி குகை​களின் தலைமை பூசாரி பீர் மஹந்த் ராம்​நாத், கோயில் நிர்​வாகம் கரு​வறை​யின் சிசிடிவி காட்​சிகளை பொது​மக்​களுக்கு வெளி​யிட வேண்​டும் என்று கோரி​னார்.

இதுகுறித்து கோயில் தலைமை நிர்வாகி பிரதம் கவுசிக் கூறுகையில், ‘‘சிசிடிவி காட்சிகள் மற்றும் இரு தரப்பினரின் அறிக்கைகளை ஆராய்ந்து வருகிறோம். உண்மை அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.