சென்னை,
இந்த ஆண்டு நவம்பர் 28-ம் தேதி முதல் டிசம்பர் 10-ம் தேதி வரை சென்னை மற்றும் மதுரையில் ஆண்கள் ஜூனியர் உலகக்கோப்பை ஆக்கி தொடர் நடைபெற உள்ளதுஇந்த நிலையில் இந்தியாவின் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ஜூனியர் உலகக் கோப்பையில் இருந்து பாகிஸ்தான் விலகியுள்ளது .
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதனால் இருநாடுகளுக்கும் இடையிலான உறவு மிகவும் மோசமடைந்துள்ளது. பாகிஸ்தானில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா விளையாட மறுத்தது. இதனால் இந்திய அணிகள் விளையாடும் போட்டிகள் துபாய்க்கு மாற்றப்பட்டது.
பாகிஸ்தான் அரசின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக பாகிஸ்தான் ஆக்கி கூட்டமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது
தற்போதைய சூழல், போட்டியில் பங்கேற்க உகந்ததாக இல்லை என நாங்கள் கருதுகிறோம். நாங்கள் எங்கள் அரசு மற்றும் பாகிஸ்தான் விளையாட்டு வாரியத்திடம் ஆலோசனை கேட்டோம். தற்போதைய அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், ஜூனியர் உலகக் கோப்பைக்காக அணியை இந்தியாவுக்கு அனுப்புவது சாத்தியமில்லை என்று அவர்கள் அறிவுறுத்தினர். என தெரிவித்தார் .