நெல் கொள்முதல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தல் 

சென்னை: ​விவ​சா​யிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்​கறை இருந்​தால் நெல் கொள்​முதல் பணி​களை விரைவுபடுத்த வேண்​டும் என்று பாமக தலை​வர் அன்​புமணி வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக அவர் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை: காவிரிப் பாசன மாவட்​டங்​களில் போதிய அளவில் நெல் கொள்​முதல் செய்​யப்​ப​டாத​தால் 15 லட்​சம் மூட்​டைகள் தேங்​கிக் கிடப்​ப​தாக ஏற்​கெனவே நான் தெரி​வித்​திருந்​தேன். அப்​போதே திமுக அரசு நடவடிக்கை எடுத்​திருந்​தால், விவ​சா​யிகளின் கண்​ணீரை தடுத்​திருக்க முடி​யும்.

கடந்த சில நாள்​களாக பெய்தமழை​யால் காவிரிப் பாசன மாவட்​டங்​களில் 2 லட்​சம் ஏக்​கருக்​கும் கூடு​தலான பரப்​பில் நெற்​ப​யிர்​கள் சேதமடைந்​துள்​ளன. அவற்​றின் மதிப்​பைக் கணக்​கிட்டு விவ​சா​யிகளுக்கு இழப்​பீடு வழங்க வேண்​டும். ஆனால், தமிழக அரசு தற்​போது வரை எந்த நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை. விவ​சா​யிகள் நலனில் தமிழக அரசுக்கு அக்​கறை இருந்​தால், நெல் கொள்​முதல் பணி​களை விரைவுபடுத்த வேண்​டும். மழை​யால் பாதிக்​கப்​பட்ட நெற்​ப​யிர்​களுக்கு இழப்​பீடு வழங்​க​வும் நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.