இங்கிலாந்து: சிறையில் கைதியுடன் உல்லாசம்; 2-வது பெண் அதிகாரி சிக்கினார்

லண்டன்,

இங்கிலாந்து நாட்டின் ஸ்டாபோர்டுஷைர் பகுதியில் உட்டாக்டர் என்ற இடத்தில் உள்ள சிறையில் ஆயுள் தண்டனை உள்ளிட்ட தண்டனை பெற்ற கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சாரா பார்னெட் (வயது 31) என்ற பெண் அதிகாரி அந்த சிறையில் பணிபுரிந்தபோது, கைதி ஒருவரிடம் உல்லாசத்தில் ஈடுபட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்து உள்ளது.

2023-ம் ஆண்டில் ஆகஸ்டு 11-ந்தேதி முதல் ஆகஸ்டு 24-ந்தேதி வரையிலான நாட்களில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எனினும், அவர் சிறை துறைக்கான பணியில் இருந்து விலகி, ஸ்டாபோர்டுஷைரின் ரூகிளே என்ற சொந்த ஊரிலேயே அழகு நிலையம் ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். சமீபத்தில் இதே சிறையில் மற்றொரு பெண் அதிகாரி ஒருவர் சட்டவிரோத சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கிறார்.

அந்த சிறையில் ஜோசப் ஹார்டி (வயது 31) என்பவர் அடைக்கப்பட்டு இருக்கிறார். அவர், 2017-ம் ஆண்டு நபர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தில் உடல் ரீதியாக காயப்படுத்திய குற்றத்திற்காக அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், 2023-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் மார்ச் 4-ந்தேதி வரையிலான நாட்களில் ஹீதர் பின்ச்பெக் (வயது 28) என்ற பெண் அதிகாரி சிறை கைதியான ஜோசப்பிடம் சட்டவிரோத வகையில், தொலைபேசி வழியே பேசியுள்ளார்.

இதற்காக, சமீபத்தில் பிர்மிங்காம் கிரவுன் கோர்ட்டில் பின்ச்பெக் ஆஜரானார். அதில், அவர் அரசு அலுவலகம் ஒன்றில் தவறாக நடந்து கொண்ட விசயங்களை ஒப்புக்கொண்டிருக்கிறார். அவருக்கான தண்டனை விவரம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ல் வெளியிடப்படும். அதுவரை அவருக்கு நிபந்தனை ஜாமீன் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நவம்பர் 6-ந்தேதி கிரவுன் கோர்ட்டில் பார்னெட் அடுத்து ஆஜராக இருக்கிறார். இதற்கு முன், சிறையின் முன்னாள் காசாளரான யோலண்டா பிரிக்ஸ் (வயது 52) என்பவர் சிறை கைதியுடன் உல்லாசத்தில் ஈடுபட்டு உள்ளார். இதனை அந்த கைதி பெருமையுடன் மற்றவர்களிடம் கூறியிருக்கிறார். இந்த தகவலை சக கைதி ஒருவர் மற்றவர்களிடம் கூறியிருக்கிறார். லிங்கன் கிரவுன் கோர்ட்டில் அவருக்கு 8 மாத கால சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து கடந்த மாதம் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.